எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள் மறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள் மறைவு

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள் மறைவு

சென்னை, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள், ராதா விஸ்வநாதன், உடல்நலக்குறைவால், நேற்று காலமானார்.கர்நாடக இசைப்பாடகி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள், ராதா விஸ்வநாதன், 88; கர்நாடக இசைப்பாடகி. மூச்சுகோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று காலை, சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, மதியம் காலமானார்.இதை, அவரது மகன் ஸ்ரீனிவாசன், தன் முகநுால் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தினார். 'உடல் ரீதியாக, 36 ஆண்டுகளாக பல போராட்டங்களை எதிர்த்து நின்றவர். பாதிப்பு குறித்த எதையும் அவர், எங்களிடம் தெரிவித்தது இல்லை. அவரிடம் இருந்து, நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்' என, ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.ராதா விஸ்வநாதனுக்கு, சந்திரசேகர், ஸ்ரீனிவாசன் என்ற இரு மகன்கள், சுபாலட்சுமி என்ற மகள், ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்ற இரு பேத்திகள் உள்ளனர். ராதா விஸ்வநாதனின் தாய், எம்.எஸ்.சுப்புலட்சுமி, 2004ல், 88 வயதில் காலமானார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
04-ஜன-201808:08:43 IST Report Abuse
Krishnamoorthy Venkataraman எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள், ராதா விஸ்வநாதன்,-இவர்களது சுப்ரபாதம், சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம், ஈஸ்வரி அம்மாவின் மாரியம்மன் பாடல்கள் காலத்தால் அழியாதவை. TMS, Govindarajan, ,Pithukuli, போன்றவர்களின் தெய்வீக குரல்களின் இன்னிசை இம்மாதம் எல்லா கோவில்களிலும் ஒலித்துக்கொண்டிருப்பது அவர்களுக்கு அஞ்சலி போல நான் நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை