டில்லி ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் குமார் விஸ்வாசுக்கு வாய்ப்பில்லை| Dinamalar

டில்லி ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் குமார் விஸ்வாசுக்கு வாய்ப்பில்லை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி, டில்லியில், ராஜ்யசபாவுக்கு காலியாக உள்ள, மூன்று இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை, ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதில், ஆம் ஆத்மி மூத்த தலைவர், குமார் விஸ்வாசின் பெயர் இடம் பெறவில்லை,டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது.ராஜ்யசபாவுக்கு, டில்லியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, காங்கிரசின், திவேதி, பர்வேஸ் ஹாஸ்மி, கரண் சிங் ஆகியோரின் பதவிக்காலம், 27ல் முடிவடைகிறது.இதையடுத்து புதிய, எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 16ல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, நாளை கடைசி நாள்.மொத்தம், 70 பேர் அடங்கிய டில்லி சட்டசபையில், ஆம் ஆத்மி, 67 தொகுதிகளில் வென்றிருந்தது.தற்போது அதன் பலம், 66 ஆக உள்ளது. அதனால், அந்த கட்சி நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி, ஏற்கனவே உறுதியாகி உள்ளது.இதற்கிடையே, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டம், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில், நேற்று நடந்தது.அதில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் ஒப்புதலோடு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.கல்வியாளர், சஞ்சய் சிங், இந்திய, 'சார்டர்ட் அக்கவுன்டன்ட்' சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர், நாராயண் தாஸ் குப்தா, பிரபல தொழிலதிபர், சுஷில் குப்தா ஆகியோர், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.கட்சி நிறுவனர்களில் ஒருவரான, குமார் விஸ்வாஸ், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
உண்மைக்கு கிடைத்த பரிசு!
ஆம் ஆத்மி சார்பில், ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடுவோர் பட்டியலில், என் பெயர் இடம் பெறாதது மிகப் பெரிய ஏமாற்றமே. கட்சியில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒப்புதல்இல்லாமல் எதுவும் நடக்காது என்பது, எனக்கு தெரியும். உண்மையாக நடந்து கொண்டதற்கு சிறந்த பரிசு கிடைத்துள்ளது.குமார் விஸ்வாஸ்மூத்த தலைவர், ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை