'பயணியிடம் கொள்ளை நடந்தால் ரயில்வே துறையே பொறுப்பு'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பயணியிடம் கொள்ளை நடந்தால் ரயில்வே துறையே பொறுப்பு'

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி, 'பாதுகாப்பான, வசதியான பயணத்தை அளிக்கும் பொறுப்பை, ரயில்வே துறை, தட்டிக்கழிக்க முடியாது; ரயில் பயணியிடம் கொள்ளை நடந்தால், அந்த இழப்பை, ரயில்வே ஈடுகட்ட வேண்டும்' என, தேசிய நுகர்வோர் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.கடந்த, 2011 பிப்ரவரியில், ஜாஸ்மின் மான் என்ற பெண், டில்லியில் இருந்து கங்காநகருக்கு, ரயிலில், 'ஏசி' வகுப்பில் சென்றார்.அப்போது, அவர் பயணித்த பெட்டியில் கதவு திறந்திருந்ததால், உள்ளே நுழைந்த திருடன், அவரை தாக்கி, நகைகளையும், பணத்தையும் பறித்துச் சென்றான்.அந்த பெண், ரயில்வே ஊழியர்களை உதவிக்கு அழைத்த போதும், யாரும் வரவில்லை.இது தொடர்பாக, மாவட்ட நுகர்வோர் கமிஷனில், ஜாஸ்மின் மான் புகார் அளித்தார்.புகாரை விசாரித்த நுகர்வோர் கமிஷன், 'பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், திருடு போன பொருட்களுக்கான பணமும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாயை, வட்டியுடன் தர வேண்டும்' என, ரயில்வேக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, ராஜஸ்தான் நுகர்வோர் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட, மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தேசிய நுகர்வோர் கமிஷனில், ரயில்வே சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.கமிஷன் முன் ஆஜரான, ரயில்வே வழக்கறிஞர், 'பயணியரின் பொருட்களுக்கு, ரயில்வே பொறுப்பாக முடியாது. ரயில்வேயின் ஏஜன்ட் அல்லது பணியாளரிடம், பதிவு செய்து ரசீது பெறப்பட்டிருந்தால் மட்டுமே, ரயில்வே பொறுப்பேற்க முடியும்' என, வாதிட்டார்.இதை ஏற்க மறுத்த, நுகர்வோர் கமிஷன் பிறப்பித்த உத்தரவு:பயணியரின் பொருள் இழப்பு, ரயில்வே ஊழியர்கள் அல்லது ஏஜன்டுகளின் அலட்சியத்தால் ஏற்பட்டது என, நிரூபிக்க முடியாவிட்டால் மட்டுமே, அதற்கு, ரயில்வே பொறுப்பேற்க முடியாது. தற்போதைய வழக்கில், ரயில்வே ஊழியர், 'ஏசி' அறையின் கதவை, அலட்சியமாக திறந்து விட்டு சென்றுள்ளார். அதனால், திருட்டு நடந்துள்ளது.தன் பொருட்களை பாதுகாக்க, மனுதாரர் குரல் எழுப்பி உள்ளார். ஆனால், ரயில்வே ஊழியர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.பாதுகாப்பான, வசதியான பயணத்தை அளிக்கும் பொறுப்பை, ரயில்வே துறை, தட்டிக்கழிக்க முடியாது; ரயில் பயணியிடம் கொள்ளை நடந்தால், அந்த இழப்பை ரயில்வே, ஈடுகட்ட வேண்டும். எனவே, மாவட்ட நுகர்வோர் கமிஷன் அளித்த உத்தரவு ஏற்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜன-201817:11:41 IST Report Abuse
g.s,rajan Railways itself lootting from the Passenger in many ways like tatkal ticket, ticket booking , cancellation charges,costly food items, worthless tea coffee etc. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜன-201816:47:13 IST Report Abuse
g.s,rajan For Late coming trains ..will the consumer court kindly look seriously and get the maximum compensation to the commuters for the extreme Delay during arrival and departure of all trains . g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201802:57:47 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல உத்தரவு... இது ஒரு சவுக்கடி. நடைமுறைக்கு வந்தால் திருந்துவான்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X