2,300 போலி மதரசாக்கள், 'லைசென்ஸ்' ரத்தாகிறது| Dinamalar

2,300 போலி மதரசாக்கள், 'லைசென்ஸ்' ரத்தாகிறது

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

லக்னோ, அரசு அறிவித்த காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாத, 2,300 போலி மதரசாக்களுக்கு அளிக்கப்பட்ட லைசென்சை ரத்து செய்ய, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது.மாநிலத்தில் உள்ள மதர சாக்கள், அரசு இணைய தளத்தில் விபரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாத, 2,300 மதரசாக்களுக்கான, 'லைசென்ஸ்'களை ரத்து செய்ய, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, உ.பி., சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், லட்சுமி நாராயண் சவுத்ரி கூறியதாவது:உ.பி.,யில், 19 ஆயிரத்து, 108 மதரசாக்களுக்கு, 'லைசென்ஸ்' கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, 'லைசென்ஸ்' பெற்றவை, மாநில மதரசா வாரியத்தின் இணையதளத்தில், விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இதற்கான கெடு, 2017 ஜூலை முதல், பல முறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக, டிச., 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதுவரை, 16 ஆயிரத்து, 808 மதரசாக்கள் மட்டுமே விபரங்களை பதிவு செய்துள்ளன; 2,300 மதரசாக்கள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.இவற்றின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர் என, யாரும் இதுவரை அரசையோ, மதரசா வாரியத்தையோ தொடர்பு கொள்ளவில்லை. அதனால், இவற்றை போலி மதரசாக்கள் என, வகைப்படுத்தி உள்ளோம்.இந்த மாத இறுதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம். அதன்பின் இந்த, 'லைசென்ஸ்'களை ரத்து செய்ய உள்ளோம். அதே நேரத்தில், இந்த நடவடிக்கையால், எந்த மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை