காஷ்மீரில் ரூ.6,809 கோடியில் சுரங்கப்பாதைக்கு ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் ரூ.6,809 கோடியில் சுரங்கப்பாதைக்கு ஒப்புதல்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், ஸ்ரீநகர் - கார்கில் - லே பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில், 6,809 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, ஸ்ரீநகர் - கார்கில் - லே பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை, பனி காலத்தின் போது ஏற்படும் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிச் சரிவால் துண்டிக்கப்படுகிறது.இதை தவிர்க்கும் வகையில், இந்த பாதையில், அனைத்து தட்பவெப்ப நிலையிலும் பாதிக்காத வகையில், சுரங்கப்பாதை அமைக்க, பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில், 14.15 கி.மீ., துாரத்துக்கு, இரண்டு தடங்கள் அடங்கிய, இருவழி சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது தவிர, இடையில் பிரிந்து செல்வதற்கான பாதையும் இதில் இடம் பெறும்.இத்திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் செயல்படுத்த உள்ளது.ஏழு ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், 6,809 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.'இந்த சுரங்கப்பாதை பணியால், மாநிலத்தின் சமூக பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன், ராணுவத்துக்கும் மிகப்பெரிய அளவில் பயன்படும்' என, தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை