ஐ.நா., அலுவல் மொழியாக ஹிந்தியை சேர்க்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.நா., அலுவல் மொழியாக ஹிந்தியை சேர்க்க திட்டம்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, ஐ.நா.,வில், அதிகார பூர்வ மொழிகளில் ஒன்றாக, ஹிந்தியை சேர்க்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. இதற்கான ஆதரவை திரட்டும் பணிகளுக்கு, 400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ஐ.நா., சபை விதிகளின்படி, மொத்தமுள்ள, 193 உறுப்பினர்களில், 129 பேரின் ஆதரவை பெற்றால் மட்டுமே, ஒரு மொழியை, ஐ.நா., அலுவல் மொழிகளில் ஒன்றாக சேர்க்க முடியும்.ஐ.நா., அலுவல் மொழிகளில் ஒன்றாக, ஹிந்தியையும் சேர்க்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது.இதற்கு, ஐ.நா., உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டும் பணிகளுக்கு, 400 கோடி ரூபாய் செலவாகும் என, தெரிகிறது. இந்த தொகையை செலவழிக்க, மத்திய அரசு தயாராகஉள்ளது.இருப்பினும், ஐ.நா., அலுவல் மொழிகளில் ஒன்றாக, ஹிந்தியை சேர்ப்பதற்கு, பல விதிகள் தடையாக இருப்பதாக, லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.சுஷ்மா சுவராஜ் அளித்த பதில்:ஐ.நா., அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக, ஹிந்தியை சேர்ப்பதற்கு, உறுப்பு நாடுகளில், மூன்றில் இரு பங்கு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டுவது சிரமமாக இருக்காது. ஆனால், ஐ.நா., விதிப்படி, அலுவல் மொழியாக ஏற்கப்பட, அதற்கான செலவுகளை, உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதற்கு, பல சிறிய நாடுகள் தயக்கம் காட்டுவதே, ஹிந்தியை, ஐ.நா., அலுவல் மொழிகளில் ஒன்றாக மாற்றுவதற்கு தடையாக உள்ளது. இருப்பினும், இதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து செய்கிறது.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை