திருத்தப்பட்ட ஓ.பி.சி., மசோதா லோக்சபாவில் தாக்கலானது| Dinamalar

திருத்தப்பட்ட ஓ.பி.சி., மசோதா லோக்சபாவில் தாக்கலானது

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, லோக்சபாவில் நேற்று, ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்பட்டோர் மசோதாவை, மத்திய அரசுதாக்கல் செய்தது.ஓ.பி.சி., கமிஷனுக்கு, அரசியல் சாசன அந்தஸ்து அளிக்க வகை செய்யும், ஓ.பி.சி., மசோதா, மழைக்கால கூட்டத்தொடரில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.ராஜ்யசபாவில், கடந்த கூட்டத் தொடரின் போது, இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்து நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன.இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்களை நீக்கும் வகையில், திருத்தப்பட்ட, ஓ.பி.சி., மசோதாவை, லோக்சபாவில் நேற்று, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர், தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில், கடந்த முறை, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டபோது இருந்த பல ஷரத்துக்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.ஓ.பி.சி., மசோதா தொடர்பாக, லோக்சபாவில் நேற்று, மத்திய அமைச்சர், கிரிராஜ் சிங், திரிணமுல் காங்., உறுப்பினர், கல்யாண் பானர்ஜி இடையே, சூடான வாக்குவாதம் நடந்தது.ஓ.பி.சி., மசோதாவிஷயத்தில், எதிர்க்கட்சிகளின் கருத்தை, ஆளும், பா.ஜ., புறக்கணிப்பதாக, கல்யாண் குற்றஞ்சாட்டினார். அவரது கருத்தை, கிரிராஜ் சிங் மறுத்துபேசினார்.தன்னை, திரிணமுல் உறுப்பினர், தகாத வார்த்தைகளில் திட்டியதாக, கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டினார்.அதை மறுத்த கல்யாண் பானர்ஜி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிரட்டப்படுவதாக கூறினார். இதனால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, சபையை, சபாநாயகர், சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை