போலீஸ் வேலைக்கு 4 நாளில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் வேலைக்கு 4 நாளில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Added : ஜன 04, 2018
Advertisement
போலீஸ்,Police,  ஆன்லைன் விண்ணப்பம், online application, சிறைத்துறை , Prison Department, தீயணைப்பு துறை,Fire service, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், Uniform Employee Selection Board, திருநங்கையர்,Transgender,காவல் துறை,

'போலீஸ் வேலைக்கு, இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'ஆன்லைன்' விண்ணப்ப முறைக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'நான்கு நாட்களில், 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


6,140 பேர்

காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்தவற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், டிச., 31ல் வெளியிட்டது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்ற, கல்வித்தகுதி அடிப்படையில், காவல் துறையில், மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவில் உள்ள, 5,538 பணியிடங்களுக்கு, திருநங்கையர் உள்ளிட்ட மூன்று பாலினத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சிறைத்துறையில் உள்ள, 365 பணி இடங்களுக்கு, ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தீயணைப்பு துறையில் உள்ள, 237 பணியிடங்களுக்கு, ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்கு, மார்ச்சில் எழுத்து தேர்வு நடக்கிறது.

இந்த ஆண்டு, புத்தாண்டு பரிசாக, போலீஸ் வேலைக்கு, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:போலீஸ் வேலைக்கு, தபால் வழியாக விண்ணப் பிக்கும் முறை இருந்தது. இதனால், விண்ணப்பங்களை கையாள்வதில் பணிச் சுமை, காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.

எனவே, ஆவணங்களை உடனுக்குடன் புகைப்படம் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.உதவி மையம்விண்ணப்பத்தாரர்களுக்கு உதவிட, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், உதவி மையம் செயல்படுகிறது.

இது, தங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும், பல விண்ணப்பத்தாரர்கள் தெரிவித்து உள்ளனர். இனி வரும் காலங்களில், நவீனப்படுத்தும் பணி தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை