உணவு தானியங்களுக்கு சணல் பை கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உணவு தானியங்களுக்கு சணல் பை கட்டாயம்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, சணல் விவசாயிகள், தொழிலாளர்களின் நலன் கருதி, உணவு தானியங்களை சணல் பைகளில் அடைத்து, 'பேக்' செய்ய வேண்டும் என்ற உத்தரவை, மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.ஆந்திரா, மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா, அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில், சணல் உற்பத்தி செய்யப்படுகிறது. பிற மாநிலங்களிலும், சில இடங்களில் சணல் பயிரிடப்பட்டாலும், மேற்கண்ட மாநிலங்களில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட விசாயிகள், இதை நம்பி வாழ்கின்றனர்.சணல் உற்பத்தியில், நான்கு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரையை சணல் பைகளில் அடைத்து, 'பேக்' செய்வது கட்டாயம் என,மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.சணல் விவசாயிகள், தொழிலாளர்களை காக்கும் வகையில், ஆண்டுதோறும், 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான சணல் பொருட்களை,மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. சணல் விவசாயிகளின் நலன் கருதி, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கமிட்டி, இந்த உத்தரவை மீண்டும் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை