இலங்கை அகதியை ஆஜர்படுத்த வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலங்கை அகதியை ஆஜர்படுத்த வழக்கு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தஉதயகலா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தஆட்கொணர்வு மனு:எனது கணவர் தயாபரராஜ்,36. இவரை அகதிகள் முகாமில் போலீசார் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. கணவரை ஆஜர்படுத்த கியூ பிராஞ்ச்போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். முகாமை விட்டுவெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு, 'தற்போதைய நிலை குறித்து மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு துணைகலெக்டர், ராமநாதபுரம் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜன.,18 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை