நாகையில் வாலிபர் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகையில் வாலிபர் கொலை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம், நாகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்து புதைத்த நால்வரை, போலீசார் கைது செய்து, தப்பியோடிய ஒருவரைதேடி வருகின்றனர்.நாகையைச் சேர்ந்தவர் மதியழகன், 24; கோயம்புத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நாகைக்கு வந்தவர், 23 - 26 வயதுடைய சக நண்பர்கள் ஐந்து பேருடன் மது அருந்தியுள்ளார்.அப்போது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மதியழகன் ஒருவரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள், மதியழகனை தாக்கி கொலை செய்து, அவரது தலையை துண்டித்து, சடலத்தை அங்கேயே புதைத்துள்ளனர்.இந்த சம்பவம், நண்பர்கள் மூலமாக கசிந்து, வெளிப்பாளையம் போலீசாருக்கு தெரிந்தது. அதையடுத்து, தாசில்தார் முன்னிலையில், போலீசார் நேற்று சடலத்தை தோண்டி எடுத்து, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.சம்பவம் குறித்து, மதியழகனின் நண்பர்கள் நால்வரை கைது செய்த போலீசார், ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை