விபத்து லாரிக்கு அடியில் சிக்கிய கிளீனர் 9 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து லாரிக்கு அடியில் சிக்கிய கிளீனர் 9 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விபத்து லாரிக்கு அடியில் சிக்கிய கிளீனர் 9 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

திட்டக்குடி, திட்டக்குடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், லாரிக்கு அடியில் சிக்கிய கிளீனரை, தீயணைப்புத் துறையினர், ஒன்பது மணி நேரம் போராடி, உயிருடன் மீட்டனர்.நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் ராஜா, 30; லாரி டிரைவர். சிதம்பரத்தைச் சேர்ந்த ராஜவேல், 32; கிளீனர். இருவரும், சென்னையிலிருந்து, திருச்சிக்கு, லாரியில் இரும்பு ராடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்தனர்.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே, நேற்று முன்தினம் இரவு, 1:00 மணிக்கு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர வயலில் பாய்ந்து, பள்ளத்தில் இறங்கி நின்றது.இதில், வெளியே துாக்கி வீசப்பட்ட டிரைவர் ராஜா தப்பினார். கிளீனர் ராஜவேல், லாரியின் இடிபாடுகளில் சிக்கி கொண்டார். ராமநத்தம் போலீசார், உளுந்துார்பேட்டை மற்றும் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் , மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இரும்பு ராடுகளின் அடியில் ராஜவேலின் கால் சிக்கியதால், அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பொக்லைன், கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கடுமையான போராட்டத்திற்கு பின், நேற்று காலை, 10:00 மணிக்கு, 9 மணிநேர போராட்டத்திற்கு பின், படுகாயங்களுடன் ராஜவேல் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை