கோயில் விழாவில் ஆடல் பாடல் அனுமதி வழங்க ஐகோர்ட் நிபந்தனை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் விழாவில் ஆடல் பாடல் அனுமதி வழங்க ஐகோர்ட் நிபந்தனை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை, 'கோயில் விழாக்களில், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது என்றால், கிராம மக்கள் அடங்கிய குழுவுக்கு தான் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.ஈரோடு மாவட்டம், கந்தசாமிபாளையம் கிராமத்தில், மகா காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழாவுக்காக நடக்கும், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க, சிவகிரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடக் கோரி, செல்வகுமார் என்பவர், மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:தனி நபர், இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். விழா ஏற்பாட்டு குழுவின் உறுப்பினராக இருப்பதாக, மனுதாரர் கூறுகிறார். விழா குழுவுக்கு, கிராமத்தினரின் அங்கீகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை. கிராமங்களில், கோவில் திருவிழா நடக்கும் போது, நாடகம், ஆடல், பாடல் என, நிகழ்ச்சிகளும் நடக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தாமல், அமைதியான முறையில், சட்டத்தை மீறாமல் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, அனுமதி வழங்குவதில் தடையில்லை.இந்த வழக்கைப் பொறுத்தவரை, கோவில் திருவிழாவுக்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, அனுமதி வழங்குவது குறித்து, போலீசார் பரிசீலிக்கலாம். மனுதாரருக்கோ அல்லது எந்த தனி நபருக்கோ, அனுமதி வழங்க கூடாது. கிராமத்தை சேர்ந்தவர்களில், ௧௦ பேர் அடங்கிய குழுவுக்கு, அனுமதி வழங்க வேண்டும். இதற்கு, வருவாய் அதிகாரிகளின் உதவியை, போலீசார் பெற்று கொள்ளலாம்.அனுமதி வழங்கும் போது, நிபந்தனைகள் விதிக்கலாம். சட்டவிரோத நடவடிக்கைகள், நிபந்தனைகள் மீறல் இருந்தால், குழுவில் இருப்பவர்கள் தான் பொறுப்பு; அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கலாம். ஆபாச நடனங்கள், வசனங்கள், இரட்டை அர்த்த பாடல்கள் போன்றவைகள் இடம்பெறக் கூடாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை