விவசாயி குடும்பத்தை தாக்கி நகை, பணம் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி குடும்பத்தை தாக்கி நகை, பணம் கொள்ளை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை, நெகமம் அருகே, விவசாயி குடும்பத்தினரை தாக்கி, நகை, பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பிய கும்பலை, போலீசார், ஒரே இரவில் கைது செய்துள்ளனர்.கோவை மாவட்டம், நெகமம் அருகே மன்றாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 78; இவர், 70, வயது மனைவி, 33, வயது மகனுடன், தோட்டத்து வீட்டில் வசித்தார்.நேற்று முன் தினம் இரவு, 11:30 மணிக்கு, உடல்நலம் சரியில்லாத மகன், வாந்தி எடுப்பதற்காக, வீட்டு கதவை திறந்து, தந்தை உதவியுடன் வெளியே வந்தார். வீட்டு முன் இருந்த மரத்தின் அருகில் பதுங்கியிருந்த நான்கு பேர், தந்தை, மகனை மிரட்டி, வீட்டிற்குள் அழைத்து சென்றனர். வீட்டில் இருந்த மூன்று பேரையும் மிரட்டி உட்கார வைத்து, பீரோ சாவியை பறித்து, 15 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர்.வீட்டில் இருந்த, எல்.இ.டி., 'டிவி' மற்றும் இரு அலைபேசிகளையும் பறித்து, போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாவியை மிரட்டி வாங்கி, அதில் தப்பினர்.ஆறுமுகம், உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கொள்ளையர்கள் அதிக துாரம் தப்பிச் சென்று விடாமல் இருப்பதற்காக, சுற்று வட்டார போலீஸ் ஸ்டேஷன்கள் உஷார்படுத்தப்பட்டன; வாகன சோதனை முழு வீச்சில் நடந்தது.தாராபுரம், சத்திரம் அருகே வாகன சோதனையில், கொள்ளையர்கள் தப்பிய, 'பியட் பூன்டோ' கார் தடுத்து நிறுத்தப்பட்டது.போலீசாரை கண்டதும், டிரைவர் தவிர, மூன்று பேரும், தப்பியோடினர். அவர்களை விரட்டி மடக்கி பிடித்தனர். இவர்களுக்கு, வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை