உதவி கமிஷனருக்கு கோர்ட் 'பிடிவாரன்ட்' | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உதவி கமிஷனருக்கு கோர்ட் 'பிடிவாரன்ட்'

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சத்தியமங்கலம், வழக்கில் ஆஜராகாத, திருப்பூர் போலீஸ் உதவி கமிஷனருக்கு, சத்தியமங்கலம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.திருப்பூர், தெற்கு போலீஸ் உதவி கமிஷனராக இருப்பவர் தங்கவேல். இவர், 2010ல் ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது, மல்லிகார்ஜுனா கோவில் பண்டிகையின் போது, பரிசலில் சென்ற நபர்கள், தண்ணீரில் தவறி விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். இது குறித்த வழக்கு, சத்தியமங்கலம் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக, உதவி கமிஷனர் தங்கவேலுவை, டிச., 29 மற்றும் ஜன., 2, ஆகிய இரு தேதிகளில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாகவில்லை.இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, சத்தியமங்கலம் நீதிமன்ற நீதிபதி குமரசிவம் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X