காதல் திருமண ஜோடி தூக்கில் தொங்கி தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமண ஜோடி தூக்கில் தொங்கி தற்கொலை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை, காளையார்கோவில் அருகே காதல் திருமணம் செய்த ஜோடி வீட்டிற்குள் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஓரிக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் கருப்பையா என்ற செல்வம்,23. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 20. பிளஸ் 2 வரை படித்துள்ளார். தாயமங்கலம் வழியாக அடிக்கடி திருவாடானைக்கு பஸ்சில் சென்றுவந்தபோதுசெல்வத்திற்கும் ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காதலாக மாறியுள்ளது.வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு குடும்பத்தினரை விட்டு பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காளையார்கோவில் அருகே உள்ள புலியடிதம்பத்தில் தனியே வசித்து வந்தனர். குழந்தை இல்லை.செல்வம் காளையார்கோவிலில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். நேற்று காலை 10: 00 மணி வரை செல்வம் வேலைக்கு வராததால், பேக்கரி உரிமையாளர் புலியடிதம்பத்திற்கு சென்று செல்வத்தின் வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவு தானாக திறந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது செல்வம் துாக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அருகில் அவரது மனைவி ராஜேஸ்வரி இறந்து கிடந்துள்ளார்.தகவல்படி காளையார்கோவில் எஸ்.ஐ.,ரஞ்சித் வழக்குப்பதிந்து விசாரித்தார். குடும்ப பிரச்னையில் ராஜேஸ்வரி சேலையில் துாக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய செல்வம் மனைவி துாக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடலை கீழே இறக்கி வைத்துவிட்டு, தானும் அதே சேலையில் துாக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X