கதர் வேட்டி,சேலை அணிந்து பொங்கலிட்ட வெளிநாட்டினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதர் வேட்டி,சேலை அணிந்து பொங்கலிட்ட வெளிநாட்டினர்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கதர் வேட்டி,சேலை அணிந்து பொங்கலிட்ட வெளிநாட்டினர்

துாத்துக்குடி இந்திய கலாசாரத்தை அறிய சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டினர் தமிழக உடையணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 32 பேர்,இந்தியாவின் கலாசாரத்தை அறிந்துகொள்வதற்காக சுற்றுலா வந்துள்ளனர். கடந்த மாதம் 28 ம் தேதி சென்னை வந்த குழுவினர், புதுச்சேரி, தஞ்சாவூர்,மதுரை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று துாத்துக்குடி வந்தனர். துாத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில், தமிழர் திருநாளான பொங்கலை, அவர்களுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.வெளிநாட்டினர் அனைவரும் கதர் வேட்டி, கதர் சேலை அணிந்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கலோ என குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இன்று (4ம் தேதி) நெல்லையிலும், 5ம் தேதி கன்னியாகுமரியையும், 6ம் தேதி திருவனந்தபுரத்திலும் சுற்றுலாவை நிறைவு செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
04-ஜன-201807:59:29 IST Report Abuse
Krishnamoorthy Venkataraman இந்தியாவின் கலாசாரத்தை அறிந்துகொள்வதற்காக சுற்றுலா வந்துள்ளனர் என செய்தி போட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X