குரங்குகளை தத்தெடுத்த எஸ்.பி.ஐ., | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரங்குகளை தத்தெடுத்த எஸ்.பி.ஐ.,

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, வண்டலுார் பூங்காவில் உள்ள சில குரங்குகள் மற்றும் பறவைகளை, பாரத ஸ்டேட் வங்கி தத்தெடுத்துள்ளது.வண்டலுார், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள, விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம், பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. அதன்படி, தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள், நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி, விலங்குகளுக்கு உணவுக்கான தொகையை தருவதன் வாயிலாக தத்தெடுக்கலாம்.பூங்காவில் உள்ள உயிரினங்களிடம், வெளி நபர்களும், அன்பு காட்டுவதை ஊக்குவிக்க, இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நிலையில், பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., அப்பூங்காவில் உள்ள, சிங்கவால் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு உள்ளிட்ட குரங்கினங்கள்; புறா, மயில், கிளி உள்ளிட்ட சில பறவையினங்களின், ஆண்டு உணவு செலவாக, 2 லட்சம் ரூபாய் செலுத்தி, அவற்றை தத்தெடுத்துஉள்ளது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-ஜன-201819:20:08 IST Report Abuse
Bhaskaran மக்களிடம் கொள்ளையடுக்கும் பணத்தில் மாக்களை பராமரிக்கின்றார்களோ என்னவோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை