போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில், நகை மற்றும் சான்றிதழ்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், காவலர்கள் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவல்லிக்கேணி, காவலர் குடியிருப்பில் வசிப்பவர், ஸ்டாலின் ஜோஸ், 36.அவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு எழுத்தாளராக பணிபுரிகிறார். அவரது மனைவி, ஷைன் ஜோஸ், 36. இருவரும், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக, சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு, 10 நாட்களுக்கு முன் சென்றனர்.நேற்று காலை, 9:00 மணியளவில் வீடு திரும்பினர். மதியம், 12:00 மணியளவில், ஷைன் ஜோஸ், பீரோவை திறந்து பார்த்த போது, 6 சவரன் நகை மற்றும் அவரது படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும், மாயமாகி இருந்தன.மர்ம நபர்கள், இவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து, ஷைன் ஜோஸ், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர், ஆரோக்கிய பிரகாசமிடம் புகார் கொடுத்து உள்ளார்.புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார், அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், காவலர் குடியிருப்பில் பேப்பர், பால் போடும் ஊழியர்கள் ஆகியோரிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.காவலர் குடியிருப்பிலேயே நகை, சான்றிதழ் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவல்லிக்கேணி, காவலர் குடியிருப்பில், ஏற்கனவே காலணிகள் மற்றும் ஷூக்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X