கோர்ட்டில் மாவோயிஸ்ட்கள் கோஷம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோர்ட்டில் மாவோயிஸ்ட்கள் கோஷம்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரான மாவோயிஸ்ட்கள், கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.ரூபேஷ், 45, என்ற மாவோயிஸ்ட்டை சில மாதங்களுக்கு முன், கேரள மாநில எல்லையில், அம்மாநில போலீசார் கைது செய்தனர். இவர், தற்போது திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதேபோல், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த வீரமணி, 53, மதுரையை சேர்ந்த கண்ணன், 47, ஆகியோர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கி, அலைபேசி சிம் கார்டு பெற்றதாக சென்னிமலையில் இரண்டு, கோபி, கடத்துார், அம்மாபேட்டை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் ஐந்து வழக்குகள், 2015ல் பதிவு செய்யப்பட்டன. போலி ஆவணங்கள் கொடுத்து, சிம்கார்டு பெற்று, மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு பயன்படுத்தியதாக, இவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளன.இந்நிலையில், நேற்று ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ரூபேஷ் தனியாகவும், கண்ணன், வீரமணி ஆகியோர் மற்றொரு போலீஸ் வேனிலும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும், பிப்., 2ல், ஆஜராக நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட வீரமணி, கண்ணன் ஆகியோர், நீதிமன்றத்துக்கு வரும் போது, '10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.இதே போல், திருச்சூரில் இருந்து அழைத்து வரப்பட்ட ரூபேஷ், 'மாவோயிஸ்ட் வாழ்க, நக்சல்கள் வாழ்க' என்று கோஷமிட்டவாறு வேனில் இருந்து இறங்கி, நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை