யானைகள் புத்துணர்வு முகாம் இன்று துவக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானைகள் புத்துணர்வு முகாம் இன்று துவக்கம்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
யானைகள் புத்துணர்வு முகாம் இன்று துவக்கம்

யானைகளுக்கான புத்துணர்வு முகாம், கோவை அருகே, இன்று துவங்குகிறது.ஆண்டுதோறும், தமிழக கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு, புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான முகாம், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள தேக்கம்பட்டியில், இன்று துவங்கி, பிப்., 18 வரை நடக்கிறது. இந்தாண்டு, யானைகளுக்கு, ஒரு புதிய உணவு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:முகாமில், 34 யானைகள் பங்கேற்கின்றன. அவற்றின் உடல் நிலையை, கால்நடை துறை மருத்துவர்கள் பரிசோதித்து, முன்னேற்றம் குறித்து, ஒப்பிட்டு பார்ப்பர். தேவைப்பட்டால், சிகிச்சை அளிக்கப்படும்.யானைகளுக்கு பசுந்தீவனம், ஊட்டச்சத்து உணவு, ஐந்து வகை பயறு வகைகள், ராகி, கரும்பு, ஏழு வகை மருந்துகள் மற்றும் பல்வேறு வகை புற்கள் உணவாக தரப்படும்.அத்துடன், இந்த ஆண்டு, 'சியவன் பிராஷ்' லேகியம் தர முடிவு செய்துள்ளோம். இது, யானைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மயிலாடுதுறை மயூரநாதன் கோவில் யானை அவையாம்பாள், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி ஆகிய இரு யானைகளும் நேற்று காலை 6:30 மணிக்கு, முகாமுக்கு வந்தன. மாலை 4:15 மணி வரை முகாமுக்கு, 23 யானைகள் வந்துள்ளன.முகாம் துவக்க விழாவில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத் துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர். -
'மங்களம் ஆப்சென்ட்'கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம், சளி தொல்லையால் ஐந்தாவது ஆண்டாக யானைகள் புத்துணர்வு முகாமுக்கு செல்லவில்லை.கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. நடப்பாண்டு முகாம் இன்று துவங்கி பிப்., 20 வரை 48 நாட்கள் நடக்கிறது. முகாமில் 34 கோவில் யானைகள் பங்கேற்கின்றன. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மங்களம் என்ற யானை சளித் தொல்லையால் நான்கு ஆண்டுகளாகபுத்துணர்வு முகாமுக்கு செல்லவில்லை.இந்த ஆண்டும் அப்பிரச்னை தொடர்வதால், புத்துணர்வு முகாமுக்கு செல்லவில்லை. முகாமில் வழங்கப்படும் மருத்துவ வசதிகள், மூலிகைகள் உணவுகள், லேகியம், மருந்து, மாத்திரைகள், கோவில் வளாகத்திலேயே இந்த யானைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவிடைமருதுார் மகாலிங்கசாமி கோவிலில் உள்ள கோமதி யானையும் வயது முதிர்வு காரணமாக இந்த ஆண்டு புத்துணர்வு முகாமுக்கு செல்லவில்லை.பயண களைப்புஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் யானை கோதை, 14 மணி நேரம் லாரியில் நின்று கொண்டு பயணம் செய்ததால், முகாமுக்கு வந்தவுடன், கால்களை நீட்டி படுத்து ஓய்வெடுத்தது. இதே போன்று பல யானைகள், பல மணி நேரம் லாரியில் பயணம் செய்ததால், சோர்வாக காணப்பட்டன.


நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201802:49:20 IST Report Abuse
தமிழ்வேல் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மருந்துகள் அவசியம்தானா என்று ஆலோசிக்கப் பட வேண்டும்.. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மருந்துகளால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய் அடிக்கடி அந்த மருந்துகளின் எபெக்ட் இருக்கும்வரை தொடர நேரிடும். அந்த மருந்துகளின் எபெக்ட் வேலைசெய்யாத சமயத்தில் இன்னொரு மருந்தின் உதவியை தேட நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை