மின் வாரிய பொறியாளர்கள் இடமாறுதல் விண்ணப்பத்தில் முறைகேடு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய பொறியாளர்கள் இடமாறுதல் விண்ணப்பத்தில் முறைகேடு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மின் வாரியத்தில், இடமாறுதல் கேட்போர் அளிக்கும் விருப்ப மனு விபரத்தை, இணையதளத்தில் வெளியிட, சிலர் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது.மின் வாரியத்தில், இடமாறுதல் கோருவோரிடம், ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், 15ம் தேதி வரை, விருப்ப மனு பெறப்படும். பின், இடமாறுதல் கேட்கும் இடம் காலியாக உள்ளதா என்பதும், ஒழுங்கு நடவடிக்கை விபரமும் பரிசீலிக்கப்பட்டு, மாத இறுதியில், இடமாறுதல் வழங்கப்படும்.அரசியல் குறுக்கீடுகளால், விதியை பின்பற்றாமல், பணம் தருவோருக்கு மட்டும் இடமாறுதல் வழங்கப்பட்டது. இதனால், நேர்மையானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, 2017ல் விருப்ப மனு வாங்கி, இடமாறுதல் வழங்க, மின் வாரியம் முடிவு செய்தது. அதில், அதிகாரம் படைத்த சிலர், ஜாதிக்கு முக்கியத்துவம் அளித்து இடமாறுதல் வழங்கியதால், பலர் பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்து, மின் வாரிய பொறியாளர்கள் கூறியதாவது:பொறியாளர்கள் இடமாறுதலுக்கு தான், லட்சக்கணக்கில் பணம் விளையாடுகிறது. எனவே, முறைகேடு இன்றி, அனைவரும் பயனடைய, விருப்ப இட மாறுதலுக்கு பெறும் விண்ணப்பத்தை, உடனுக்குடன் வாரிய இணைதளத்தில், வெளியிட முடிவு செய்யப்பட்டது.அதன்படி, ஜன., மாதத்திற்கான, விருப்பு இடமாறுதல் விண்ணப்பம், வரும், 15ம் தேதி வரை பெறப்படும். சிலர், இணையதளத்தில், அந்த விபரத்தை வெளியிட முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால், எத்தனை மனுக்கள் பெறப்பட்டது, அவர்கள் கேட்ட இடம் வழங்கப்பட்டதா உள்ளிட்ட விபரங்களை, அனைவரும் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் கணக்கெடுப்புஊழியர்கள், பொறியாளர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க, மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிவோரை, இடமாற்றம் செய்ய, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதை, பிப்ரவரி முதல் அமல்படுத்த போவதாக, மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்தார். அதற்கு, ஒரு மாதமே அவகாசம் உள்ளதால், தற்போது, பணியில் இருப்பவர்கள், அங்கு எத்தனை ஆண்டுகள் பணிபுரிகின்றனர் என்ற கணக்கெடுப்பை, மின் வாரியம், விரைவாக துவக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை