68 வயதில் என்ன செய்யப் போகிறார் ரஜினி குறித்து புகழேந்தி கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

68 வயதில் என்ன செய்யப் போகிறார் ரஜினி குறித்து புகழேந்தி கிண்டல்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர், ''ஜெயலலிதா, எம்.ஜி.,ஆர்.,-என்.டி., ராமாராவ் ஆகியோரது பொது வாழ்க்கை, 68 வயதில் முடிந்து விட்ட நிலையில், 68 வயதிற்கு பின் அரசியலுக்கு வந்து, ரஜினி என்ன செய்ய போகிறார் என்பதை வேடிக்கை பார்ப்போம்,'' என, ஓசூரில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.ஓசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், சிறுபான்மை மக்களை கட்டி காப்பாற்றினர். ஆனால், இப்போதுள்ள அமைச்சர்கள், முத்தலாக் சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் கூட கொண்டு வராமல் உள்ளனர். ஆண்மை இல்லாதவர்கள் என கூறிய குருமூர்த்தியை, மன்னிப்பு கேட்க கூட வைக்க முடியவில்லை. மானம், மரியாதை இல்லாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தினகரனை பற்றி தான் பேசுகின்றனர். ஆட்சி மாற்றம், காட்சி மாற்றமாக மாறும். இந்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் ஜால்ராவாக உள்ளது. என்.டி., ராமாராவ், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஆகியோரது பொது வாழ்க்கை, 68 வயதில் முடிந்து விட்டது. ஆனால், 68 வயதிற்கு பின் அரசியலுக்கு வந்து, ரஜினி என்ன செய்ய பேகிறார் என்பதை வேடிக்கை பார்ப்போம், என்று அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X