முதலீட்டாளர் மாநாடு நடக்குமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதலீட்டாளர் மாநாடு நடக்குமா

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குழப்பமான அரசியல் சூழலில், முதலீட்டாளர் மாநாடு நடத்துவது தொடர்பாக, தமிழக அரசு, ஒரு வாரத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளது.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2015ல், 100 கோடி ரூபாய் செலவில், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை, சென்னையில் நடத்தினார். அப்போது, 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்க்க, ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 'இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்' என்றும், ஜெ., அறிவித்திருந்தார். ஆனால், அவரது மறைவிற்கு பின் ஏற்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக குழப்பத்தால், 2017ல், முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவில்லை.இதற்கிடையில், '2015ல் அறிவித்த படி, முதலீடுகள் வராத நிலையில், மீண்டும், அடுத்த மாநாடு நடத்துவதா' என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனாலும், தமிழக அரசு, இந்த ஆண்டு மாநாட்டை நடத்தப்போவதாக கூறி வருகிறது. அதேநேரத்தில், ௨௦௧௫ல், மாநாட்டு சிறப்பு அதிகாரியாக, ஜெ., நியமித்த, விஜய் பிங்களே, மத்திய அரசு பணிக்கு, ஓட்டம் பிடித்து விட்டார் அதனால், மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதலீட்டாளர் மாநாட்டை நடத்த, பெயரளவில் அரசு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதனால், மாநாடு நடத்த தேவையான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, உயர் அதிகாரிகள் தலைமையிலான கூட்டம், கோட்டையில் அடுத்த வாரம் நடக்கிறது. இதில், இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றனர். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை