பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை அக்காள் மகள், கணவர் உட்பட 6 பேர் கைது 101 பவுன் நகைகள், பைக், கார் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை அக்காள் மகள், கணவர் உட்பட 6 பேர் கைது 101 பவுன் நகைகள், பைக், கார் பறிமுதல்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை அக்காள் மகள், கணவர் உட்பட 6 பேர் கைது 101 பவுன் நகைகள், பைக், கார் பறிமுதல்

திருநெல்வேலி, நெல்லையில் பெண்ணை தாக்கி 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவரது அக்காள் மகள், அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.101 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.திருநெல்வேலி ஜங்ஷன், பெரிய தட்டார்குடிதெருவை சேர்ந்தவர் செல்லப்பா 65. பழ மொத்த வியாபாரி. இவரது மகன் தங்கத்துரை மற்றும் மருமகள் காந்திமதியுடன் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 12ம் தேதி மதியம், காந்திமதி 34, வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது இரு வாலிபர்கள் வந்து அரிவாளை காட்டி மிரட்டி காந்திமதியை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 200 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.சம்பவம் குறித்து தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவையும், அதன் காட்சிகள் பதிவு பெட்டியையும் கொள்ளையர்கள் துாக்கிச்சென்றுவிட்டனர். இருப்பினும் அதே தெருவில் ஒரு கடையில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை போலீசார் துப்புதுலக்கினர்.அலைபேசியால் சிக்கினர்இதுகுறித்து குற்றப்பிரிவு துணைகமிஷனர் பெரோஸ்கான் கூறியதாவது: இந்த சம்பவத்தில் ஈடுபடும்போது கொள்ளையர்களில் ஒருவன், அங்கிருந்தபடி யாருக்கோ அலைபேசியில் அடிக்கடி பேசி, நகைகள் இருக்கும் விபரத்தை கேட்டுக்கொண்டிருந்ததாக காந்திமதி கூறினார். அதன் அடிப்படையில் அலைபேசி எண்களை கொண்டு விசாரித்தபோது குற்றவாளிகள் குறித்து துப்புதுலங்கியது.மகளும் உடந்தைகாந்திமதியின் அக்காள் மகள் சுபிக் ஷா 22, சென்னையில் கணவர் அழகு நயினாருடன் வசிக்கிறார். அழகுநயினார் 24, நெல்லையை அடுத்துள்ள செய்துங்கநல்லுாரை சேர்ந்தவர். பல்வேறு கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் சிறை சென்றுள்ளார்.காந்திமதியின் 17 வயதாகும் மகளும் சென்னையில் வசிக்கிறார். அழகுநயினார்,சுபிக் ஷா, காந்திமதியின் மகள் ஆகிய மூவரும் சேர்ந்து வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இதற்காக அழகுநயினார் சம்பவ இடத்திற்கு வராமல், ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மேலச்செவல் லட்சுமணகாந்தனை ஈடுபடுத்தியது தெரியவந்தது.வீட்டில் புகுந்து லட்சுமணகாந்தன் மற்றும் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சுதர்சன் ஆகியோர் கொள்ளையடித்துள்ளனர். வீட்டுக்கு வெளியே ஆட்களை கவனிக்கவும் கொள்ளைக்கு பிறகு நகைகளை கொண்டு செல்லவும் சிந்துபூந்துறை மணிகண்டபூபதி 22, ரஹ்மத்நகர் விக்னேஷ்மணிகண்டன் 18 ஆகியோர் பைக்குடன் நின்றுள்ளனர்.6 பேர் கைதுசிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் மணிகண்டபூபதி 22, சுதர்சன் 20, விக்னேஷ் மணிகண்டன் 18 ஆகியோரை கைது செய்துள்ளோம். தற்போது அழகுநயினார் அவரது மனைவி சுபிக் ஷா, லட்சுமணகாந்தன் ஆகியோரை கைது செய்துள்ளோம்.சம்பவ இடத்தில் 136 பவுன் நகைகள் கொள்ளை போயின. அதில் 101 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளைக்கு உதவிய மேலும் ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோரை கைது செய்ய உள்ளோம். கொள்ளையின் போது பயன்படுத்திய ஒரு பல்சர் பைக், ஒரு ஸ்விப்ட் கார் ஆகியவற்றையும் பறிமுதல்செய்துள்ளோம் என்றார்.வழக்கில் துப்புதுலக்கிய உதவிகமிஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்குமார், ேஷக் அப்துல்காதர், காசிப்பாண்டியன், விஜய் கோல்டன்சிங் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினரையும் பாராட்டினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
04-ஜன-201811:07:02 IST Report Abuse
Milirvan சொந்த மகளும், அக்கா மகளும் அவள் புருஷனும், சேர்ந்து கொள்ளை... .கலிகாலம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை