வழக்கறிஞர்களுக்கான நிபந்தனைகள்: நிறுத்தி வைத்தது ஐகோர்ட் | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர்களுக்கான நிபந்தனைகள்: நிறுத்தி வைத்தது ஐகோர்ட்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை, 'வக்காலத்து படிவத்துடன், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை, வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற நிபந்தனையை, பிப்., ௨௮ வரை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.உயர் நீதிமன்ற பதிவுத்துறை, சமீபத்தில் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவு, ௨௦௧௮ ஜன., ௨ முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வக்காலத்து படிவத்துடன், வழக்கறிஞரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தாக்கல் செய்ய வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பார் கவுன்சிலில் இருந்து பெற வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல், வக்காலத்து படிவம் ஏற்கப்படாது வக்காலத்து படிவத்தை, சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டையும், தாக்கல் செய்யப்பட வேண்டும் இருப்பிட முகவரியுடன், படிவத்தை தாக்கல் செய்யும் வழக்கறிஞர் மற்றும் சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞரின், அலுவலக முகவரியையும் அளிக்க வேண்டும் குற்றவியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில், வழக்கறிஞரின் கையெழுத்து இருக்க வேண்டும். பார்கவுன்சில் பதிவு எண்ணை குறிப்பிட்டு, அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டும். இதில், சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் சரிபார்த்து கொள்ளலாம் அடையாள அட்டையை சரிபார்க்க, நீதிமன்றம் அல்லது பதிவுத்துறை கோரினால், அதை, வழக்கறிஞர்கள் அளிக்க வேண்டும்.பதிவுத்துறை பிறப்பித்த, இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், அதன் செயலர், கிருஷ்ணகுமார் மனுதாக்கல் செய்தார். சென்னை பார்அசோசியேஷன் மற்றும் ஒரு வழக்கறிஞரும்,மனுக்கள் தாக்கல்செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதிகள், எச்.ஜி.ரமேஷ், டீக்காராமன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.நீதிமன்றத்தில் நடந்த வாதம்:வழக்கறிஞர் கிரிதர்: தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், பதிவுத்துறை இந்த சுற்றறிக்கையை பிறப்பித்துள்ளது. விதிகளை ஏற்படுத்த, உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதை தனி நீதிபதி மேற்கொள்ள முடியாது.உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் விவாதித்து, ஒப்புதல் அளித்த பின், நிர்வாக ரீதியில் விதிகளை ஏற்படுத்த முடியும். சுற்றறிக்கை பிறப்பிக்க, பதிவுத்துறைக்கு அதிகார வரம்பு இல்லை. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்.வழக்கறிஞர் ராகவாச்சாரி: விதிகள் வகுத்ததில், சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. வழக்குகளை தாக்கல் செய்வதில், சிரமம் ஏற்படுகிறது. எனவே, சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.வழக்கறிஞர்கள் சங்க தலைவர், மோகன கிருஷ்ணன், சென்னை பார் அசோசியேஷன் நிர்வாகி, கமலநாதன்: பதிவுத்துறை விதித்துள்ள நிபந்தனைகளால், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, வழக்கு எண் கொடுக்கப்படவில்லை.இவ்வாறு, ஆயிரக்கணக்கில் வழக்குகள் உள்ளன. பார் கவுன்சிலில் இருந்து அடையாள அட்டை பெறுவதற்கு, ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். சுற்றறிக்கையால், வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு வாதம் நடந்தது.இதையடுத்து, வக்காலத்து படிவத்துடன், வழக்கறிஞர்களின் அடையாள அட்டை மற்றும் சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞரின் அடையாள அட்டை நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை, பிப்., ௨௮ வரை, டிவிஷன் பெஞ்ச் நிறுத்தி வைத்தது.நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, பதிவுத்துறை மற்றும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜன-201807:36:45 IST Report Abuse
அப்பு நடத்துங்க...நீதிபதிகள் நேற்றுவரை வக்கீல்கள்தானே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை