என்னிடம் உள்ள அணு ஆயுத பட்டன் வேலை செய்கிறது: டிரம்ப் மிரட்டல் | Dinamalar

என்னிடம் உள்ள அணு ஆயுத பட்டன் வேலை செய்கிறது: டிரம்ப் மிரட்டல்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (2)
Advertisement
என்னிடம் உள்ள அணு ஆயுத பட்டன் வேலை செய்கிறது: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், ஜன. 4-'அணு ஆயுதங்களை ஏவுவதற்காக, என் கட்டுப்பாட்டில் உள்ள பட்டன் சக்தி வாய்ந்தது. அது, நன்றாக வேலையும் செய்யக் கூடியது' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக திகழும், வட கொரியா அதிபர், கிம் ஜாங் உன், 'என் டேபிள் மீது, அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் தயார் நிலையில் உள்ளது' என, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சமீபத்தில் தெரிவித்திருந்தார்; அது, உலக நாடுகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், கிம் ஜாங் உன்னுக்கு பதிலடி அளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர், டிரம்ப், 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:உண்ண உணவின்றி, வறுமையில் வாடும் மக்கள் வாழும் நாடான, வட கொரியாவின் அதிபர், சமீபத்தில், அவர் டேபிள் மீது, அணு ஆயுதங்களை ஏவும் பட்டன் இருப்பதாக கூறியிருந்தார். அவரிடம், என்னிடமும், அணு ஆயுதம் ஏவும் பட்டன் இருப்பதாக தெரிவியுங்கள்.என்னிடம் உள்ள, அணு ஆயுதம் ஏவுவதற்கான பட்டன், மிகப்பெரியது; கிம் ஜாங் உன்னின் பட்டனை விட, அதிக சக்தி வாய்ந்தது. எல்லாவற்றுக்கும் மேல், என்னிடம் உள்ள பட்டன், நன்றாக வேலையும் செய்கிறது.இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்துக்கு நிதி, 'கட்'

இஸ்ரேலின் தலைநகராக, ஜெரூசலேமை அங்கீகரிப்பதாக கூறிய அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், ''அமைதி பேச்சில் ஈடுபடாவிட்டால், பாலஸ்தீனத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்,'' என, எச்சரித்து உள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:ஐ.நா., நிவாரணம் மற்றும் பணிகள் அமைப்பின் மூலம், பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகளின் நலனுக்காக, அமெரிக்கா கோடிக் கணக்கான டாலர்களை அளிக்கிறது. பாலஸ்தீனத்தில் நடக்கும் பல்வேறு பணிகளுக்கு, அதிக நிதி உதவி அளிக்கும் நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.ஆனால், இஸ்ரேலுடன் அமைதி பேச்சு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, பாலஸ்தீனம் ஏற்கவில்லை. அதனால், பாலஸ்தீனத்துக்கு அளிக்கும் உதவிகள் நிறுத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
04-ஜன-201811:16:01 IST Report Abuse
Milirvan நிறுத்தியே விடுங்களேன்.. என்ன போயிற்று?
Rate this:
Share this comment
Cancel
Palanivel -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜன-201808:52:34 IST Report Abuse
Palanivel நம்ப மாட்டோம். இருவறும் ஒரு முரை பட்டனை அமுக்கி காட்டினால்தான் நம்பிக்கை கொள்வோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை