'அருணாச்சலே இல்லை' சீனா மீண்டும் அடாவடி | Dinamalar

'அருணாச்சலே இல்லை' சீனா மீண்டும் அடாவடி

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சீனா,China, இந்தியா,  India,அருணாச்சல பிரதேசம் , Arunachal Pradesh, கெங் சுவுாங்,Keng Chuang,  டோக்லாம், Tokelam,இந்தியா - சீனா எல்லை, India - China border,

பீஜிங், இந்தியாவின், அருணாச்சல பிரதேச எல்லைக்குள், 200 மீ., துாரம், சீன வீரர்கள் ஊடுருவியதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், கெங் சுவுாங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:இந்தியாவுடனான எல்லை பிரச்னையில், சீனாவின் நிலைப்பாடு என்றுமே தெளிவாக, உறுதியானதாக உள்ளது. அருணாச்சல பிரதேசம் என்ற ஒன்று இருப்பதை, சீனா, ஒருபோதும் அங்கீகரித்தது கிடையாது. சீன ஊடுருவல் தொடர்பாக, செய்தி வெளியானதாக கூறப்படுகிறது; அது பற்றி எனக்கு தெரியாது.இந்தியா - சீனா இடையிலான, எல்லை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தீர்வு முறை அமலில் உள்ளது. இந்த முறையில், எல்லை தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க முடியும். எல்லையில், அமைதி, ஸ்திரத்தன்மையை பேணுவது, இந்தியா - சீன நாடுகளுக்கும் நல்லது.இந்தியா - சீனா இடையே, கடந்தாண்டு, டோக்லாம் பகுதியில் எழுந்த பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
doss - nagercoil,இந்தியா
04-ஜன-201816:17:34 IST Report Abuse
doss சீனா வாலை அடக்கிக்கொள்ளுபடி இந்தியா ஏதாவது செய்ய வேண்டும் .இது மிக அவசரம்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
05-ஜன-201808:34:34 IST Report Abuse
Anandanசெய்ய திராணி வேண்டும். வெட்டி பேச்சு பேசினால் ஒன்றும் பயனில்லை....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
04-ஜன-201813:19:47 IST Report Abuse
Pasupathi Subbian சீனாவுக்கு வேறு வேலையே இல்லை. இருக்கிறதை வைத்து சிறப்பா செய்றத விட்டுபுட்டு, அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
04-ஜன-201812:34:50 IST Report Abuse
Milirvan பதிலை தெரிந்து கொண்டே விதண்டாவாதமாக கேட்கிறீர்கள்.. சரி.. மோடிஜி சீனனிடம் அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்கமுடியாத பகுதி என்று காலாகாலமாக அமைச்சுக்கள் மூலம் கூறியதையே திரும்ப சொல்லவைப்பார். அதுவே மக்களுக்கும்.. இது சில நாட்களில் தெரிய வரும்..
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
04-ஜன-201812:24:20 IST Report Abuse
GB.ரிஸ்வான் இந்த எல்லை பிரச்சனைகளை சமாளிக்க தெரியாத புரியாத அரசு ...வெறுமே...ஆடு,மாடு,பசு,தாஜ்மஹால்,காவி பெயிண்ட் ,,கோவில் மசூதி அயோத்தி பாபரி முத்தலாக் னு ஒரே பிஸி ..கொஞ்சம் கொஞ்சமாக இந்திய எல்லைகளை அடுத்த நாட்டுக்காரன் ஆட்டைய போடுறதை தெரியல..
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
04-ஜன-201811:56:32 IST Report Abuse
Ravichandran இருவரும் சண்டை போட்டுக்கொள்வது முடியாத காரியம், வெற்றி தோல்வி தவிர்த்து இருவர்க்கும் மிக பெரிய அழிவூ ஏற்படும், அருணாச்சல பிரதேச பிரச்சனையில் சீனா தலையிட்டால் திபெத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாற்றி இருக்கவேண்டும் திபெத்திற்கு சீனா பகுதி அந்தஸ்தை இந்திய விலகிக்கொள்வது சரியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
sachin - madurai,இந்தியா
04-ஜன-201811:37:33 IST Report Abuse
sachin திபெத் ஐ இந்திய ஒரு பொது சீனாவின் அங்கமாக கருத வில்லை ...ஆகவே திபெத் இந்தியாவுடன் இணையலாம் அல்லது தனி நாடக இந்தியா அங்கீகரிக்கும் என்று ஒரு குண்டை போடுங்க சப்பை மூக்கன் ஓடி வந்து காலில் விழுவான் .....( 50 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அருணாச்சல பிரதேஷ் காப்பாத்த பட்டு தான் உள்ளது ...பாஜக இப்போ வந்த புது கத்தரிக்காய் கொஞ்சம் துள்ள தான் செய்யும் அது இந்தியாவுக்கு ஆபத்து தான் ..பேச்சு வார்த்தை மூலம் தான் எதையும் சாதிக்க முடியும் ) ...தேசப்பற்று என்று சொல்லி கொள்ளும் பாஜக ஒரு நாட்டிற்கு ஆபத்து தான் ....
Rate this:
Share this comment
Cancel
John - Chennai,இந்தியா
04-ஜன-201809:42:17 IST Report Abuse
John ஒன்றை கவனிக்க வேண்டும்..எப்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் சீனா நம்மிடம் வாலை ஆட்டுகிறது..
Rate this:
Share this comment
Cancel
ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா
04-ஜன-201809:27:59 IST Report Abuse
ராமன் அப்துல்லா தற்போது நடக்கும் பிஜேபி ஆட்சியில் அருணாச்சலபிரேதசம் பாதுகாக்கப்படும்.. அடுத்து வரும் காங்கிரஸ் ஆட்சியில் வழக்கம்போல தாரை வார்த்து தரப்படும்..
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
04-ஜன-201810:57:00 IST Report Abuse
தாமரை ஏனுங்க அப்துல்லா அடுத்துவரும் காங்கிரஸ் ஆட்சி என்று கவுண்டமணி பாணியில் . பஞ்சாப்பைத் தவிர காங்கிரஸ் எங்குமே வராது .காங்கிரஸ் வருமென்ற நினைவே தேசத்துக்கு ஆபத்தானது....
Rate this:
Share this comment
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
04-ஜன-201811:02:16 IST Report Abuse
Lawrence Ronபி ஜே பி இக் கு முன்பு யாரு யாரு பாது காத்தது? கட்டிப்பிடித்து கெஞ்சி கூத்தடி அவர்களை வெளியேற்றுவோம்...
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
04-ஜன-201808:44:40 IST Report Abuse
 ஈரோடுசிவா சீனப்பொமெரேனியன் அடிக்கடி குலைத்துக் கொண்டிருக்கிறது ... இதற்கு தீர்வு ... இந்த நாய்களின் தயாரிப்புகளை தடை செய்வது தான்...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
04-ஜன-201808:09:13 IST Report Abuse
Kuppuswamykesavan ///சுத்தி இருக்கிற எல்லாவனுக்கிட்டேயும் பிரச்சனை.. (பாக்.,ஐ தவிர)./// ஹும், இப்படியே சீனா, தன் நடத்தையை தொடர்ந்தால், ஓர் நாள், அதன் சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் கூடி, சீனாவை உதைப்பார்கள் எனலாம். அப்போது பாக், தான் நடுநிலை என்று கூறி, ஒதுங்கிவிடுவான் பாருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை