மார்கழி வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி வழிபாடு

Added : ஜன 04, 2018
Advertisement
மார்கழி வழிபாடு

திருப்பாவை
பாடல் 20முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்ேடலோர் எம்பாவாய்.பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் துாயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
திருவெம்பாவைபாடல் 20போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாத மலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை