Former Pakistan PM Sharif attacks Donald Trump over remarks on Islamabad | பாக். பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிரம்பிற்கு நவாஸ் பதிலடி| Dinamalar

பாக். பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிரம்பிற்கு நவாஸ் பதிலடி

Updated : ஜன 04, 2018 | Added : ஜன 04, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நவாஸ் ஷெரீப்,Nawaz Sharif,  அமெரிக்க அதிபர் டிரம்ப்,US President Trump, பயங்கரவாதம் ,terrorism,  பாகிஸ்தான், Pakistan,பிரதமர் ஷாகித் அப்பாஸி,  Prime Minister Shahid Abbasi,


இஸ்லமாபாத்: பாக்.கிற்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளன. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பொய் சொல்லி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது," என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கூறியது, பொய்யான குற்றச்சாட்டினை டிரம்ப் சுமத்தியுள்ளார். பணத்துக்காக பொய் சொல்லி ஏமாற்ற வேண்டிய அவசியம் பாகிஸ்தானுக்கு இல்லை. அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கும் பாகிஸ்தானை விமர்சிப்பதற்கு டிரம்ப்பிற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு உதவி தேவைப்படாத அளவிற்கு திட்டம் ஒன்றை கொண்டுவர பிரதமர் ஷாகித் அப்பாஸிக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு நவாஸ் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
04-ஜன-201814:24:14 IST Report Abuse
I love Bharatham இந்த உலகையே பயமுறுத்தும் பயங்கரவாதிகள் = இந்த உலகையே பயமுறுத்த பயங்கர நாடு இரண்டுமே ஒரே இனத்தை சேர்த்தவர்கள்....கூட்டு கொள்ளையர்கள்....
Rate this:
Share this comment
Cancel
04-ஜன-201813:21:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அதான் பிச்சை போடமாட்டேன் என்று சொல்லிவிட்டானே அப்புறம் என்ன கவுரவ பிச்சை எடுக்கிறீர்கள். அடுத்தவன் பணத்தை வைத்து சும்மா உட்கார்ந்து தின்றுகொண்டிருந்தால் அடுத்தவனை எப்படி கெடுக்கலாம் என்பதும் அடுத்தடுத்து பொண்டாட்டிக்கு பிள்ளை கொடுப்பதும்தான் நடக்கும். மூளைக்கும் , உடலுக்கும் வேறு வேலை கொடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா
04-ஜன-201810:04:58 IST Report Abuse
ராமன் அப்துல்லா ஒரு பொய்யாவது சொல் பாக்கே,,உன் அடிமை நான் தான் என்று,,அந்த பொய்யில் பெரியண்ணன் வேலையை இன்னும் நான் பார்ப்பேன்..உலகத்தில் உன்னால் சத்தம்,இதை தாங்குமா எங்கள் நெஞ்சம்?
Rate this:
Share this comment
Cancel
ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா
04-ஜன-201809:26:01 IST Report Abuse
ராமன் அப்துல்லா கால காலமாக வாழும் நம்பிக்கை துரோகத்துக்கு நாங்கள் அர்ப்பணம்..சீனாக்காரன் இந்தியாக்காரன் கூட செய்ததில்லை எங்கள் டுபாக்கூர் நரித்தனம்..
Rate this:
Share this comment
Cancel
Gunasekar - hyderabad,இந்தியா
04-ஜன-201809:09:01 IST Report Abuse
Gunasekar /பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கூறியது, பொய்யான குற்றச்சாட்டினை டிரம்ப் சுமத்தியுள்ளார். /- பின் லாடன், பின் லாடன் ன்னு ஒருத்தன் ...... அவங்க நாட்டு இரட்டை கோபுரத்தை சிதைச்சி பல்லாயிரக்கணக்கான அமெரிக்கன்ங்களை கொன்னுப்புட்டு......... உங்க நாட்டுல தான் ஒளிஞ்சி இருந்தான்... நீங்க அவன் எங்கயோ போய்ட்டான் ன்னு கைய விருச்சி காமிசீங்களே உங்களை பொய்யான்னு தெரிஞ்சி தான்னே உங்க நாட்லே technique தேடி உங்க நாட்டுலேந்து புடிச்சி உங்க நாட்டுலேயே கொன்னு , உங்க நட்ட்லேந்து உடலை எடுத்து போய் உங்க மதத்தவனை கடல்ல தூக்கி எறிஞ்சாங்களே................. அது மட்டுமே பொய்.... சமீப காலத்துல , ஆப்கானிஸ்தான் ல உங்க வன்முறையாலோ கொலை செய்ய பட்ட பெண்ணோட போட்டோ வை ஐ.நா ல , காமிச்சு ..... இந்தியா கொன்னுடுச்சின்னு கொஞ்சங்கூட சபை யா மதிக்கமா உட்டிங்களே .....உலகமே அப்பா காரி துப்பிச்சே ....... அதெல்லாம் என்ன 100 % அக்மார்க் உண்மையா?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
04-ஜன-201808:46:04 IST Report Abuse
Kuppuswamykesavan அட செரியான, "கௌரவ பிச்சையாத்தான்" , இருக்கு பாக் நிலமை. பிச்சை எடுத்தேனும், உன் கல்வி அறிவை உயர்த்திக் கொள் என்றார், ஔவையார் மூதாட்டி. ஆனால், பாக் அமெரிக்காவிடம் பிச்சை எடுத்தேனும், தீவிரவாதிகளை உற்பத்தி செய்து, இவர்களை உலகுக்கு அர்ப்பணித்து, உலகம் முழுக்க நிரந்தர அமைதி நிலை(?) எற்ப்பட, பாக் எப்படி எல்லாம் உழைக்குது என்பதை பாருங்க வாசகர்களே?.
Rate this:
Share this comment
Cancel
Saakrin - Chennai,இந்தியா
04-ஜன-201807:52:20 IST Report Abuse
Saakrin முன்னாள் பிரதமர் நவாஸ் இந்நாள் பிரதமர் ஷாகித் அப்பாஸிக்கு உத்தரவிட்டுள்ளார். எல்லாரும் ஜோரா கைதட்டுங்க.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
04-ஜன-201806:40:06 IST Report Abuse
தங்கை ராஜா அவனுக தான் வேண்டாம்னு சொல்றானுகளே அப்பறம் என்ன நட்பு நாடு நாசமாப் போன நாடுன்னு. பிச்சை போடுறவன் நாலையும் சொல்லத்தான் செய்வான்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஜன-201806:08:50 IST Report Abuse
Sanny தினமலர் அதென்ன தலைப்பு, 'பதிலடி' , கெஞ்சி அழுகிறார் என்று போடுங்க, கை நீட்டி காலகாலமாய் பணம், துட்டு, மணி வாங்கினீங்க, இப்ப தட்டி கேட்கப்படாதாம், உரிமையுமில்லையாம், வளர்த்த கடா.... கதை. அப்படியே பின்லேடனின் முடிவையும் எப்படி ஆனது என்றும் சொன்னால் நல்லது, அவரை எங்கள் நாட்டில் வைத்தே கொல்லவில்லை, வேறுநாட்டில் ஹொலிவூடில் சினிமா செட்டிங் செய்து எடுத்தது என்று சொல்லுடா.
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - Edmonton,கனடா
04-ஜன-201805:53:10 IST Report Abuse
Ravi Manickam கவுண்டமணி (நவாஸ்) டயலாக, ஒரு வீட்டுல திங்குர உனக்கே இவ்வளவு கொழுப்புன்னா... பல வீட்டுல வாங்கி திங்குர எனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை