சிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் கண்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் கண்டிப்பு

Updated : ஜன 05, 2018 | Added : ஜன 04, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
சிலை கடத்தல், தமிழக அரசு,Tamil Nadu Government, ஐகோர்ட்,High court, சி.பி.ஐ.,CBI, இந்து சமய அறநிலையத்துறை , ஏகாம்பர நாதர் கோயில் , பொன். மாணிக்கவேல், Pon manickavel, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு,

சென்னை: 'சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவுக்கு, உரிய வசதிகளை அளிக்கவில்லை என்றால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது எனவும், கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில், சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மனுக் கள் தாக்கல் செய்திருந்தனர்.
விசாரித்த, நீதிபதி மகாதேவன், ௭ ஜூலையில், தமிழக அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துஇருந்தார். ஐ.பி.எஸ்., அதிகாரி, பொன் மாணிக்கவேல் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், அதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டிருந்தார். வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள, சிலை கடத்தல் வழக்குகளை, கும்பகோணத்தில் உள்ள, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றவும், குற்றம் புரிந்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

ஐகோர்ட் எச்சரிக்கை

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள் கூடி விவாதித்து, அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இந்த வழக்கு, அவ்வப்போது விசாரணைக்கு வரும் போது, அரசு தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்து வந்தார்.

இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர், மகாராஜா, ஐ.பி.எஸ்., அதிகாரி, பொன் மாணிக்கவேல் ஆகியோர் ஆஜராகினர்.'சிலை கடத்தல் தடுப்பு தொடர்பாக, அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 'காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கான தங்க சிலை விவகாரம், சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது' என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி, மகாதேவன் கூறியதாவது:நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதில், அரசுக்கு என்ன கஷ்டம் உள்ளது?தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாக்கும் நோக்கில், உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில், அறநிலையத் துறையும் அலட்சியம் காட்டுகிறதா?சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை, ஏன் அளிக்கவில்லை; அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?அரசுக்கு அனுப்பிய பரிந்துரைகளை, இரண்டு வாரங்களில் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற நேரிடும்.நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது. கடைமட்ட ஊழியரில் இருந்து, அதிகாரிகள் வரை, யாரும் தப்ப முடியாது.நீதிமன்றத்தின் உத்தரவுகளை, பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் என, அலட்சியம் காட்டினால், தலைமை செயலர் மற்றும் அறநிலையத் துறை ஆணையர், நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட வேண்டியது வரும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-ஜன-201822:30:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போல, சிலை திருட்டையும் அரசே ஏற்று கொண்டு நடத்தலாமே.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
04-ஜன-201822:05:18 IST Report Abuse
adalarasan may be some politicians also involved. tat is why they are not cooperating
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201821:52:21 IST Report Abuse
Pugazh V இந்த அறநிலையத்துறையில் பிற மதத்தினர் யாரும் அதிகாரிகள் இல்லையே....இந்துக்களே அவர்களின் தெய்வங்களின் சிலைகள் சொத்து க்களை திருடறாங்களா? பக்தாள்ஸ் யாரும் எதுவும் சொல்லலியே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை