அரசியலில் ஊழல்வாதிகள் அதிகம்: கவர்னர் புரோஹித், 'பளார்' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசியலில் ஊழல்வாதிகள் அதிகம்:
கவர்னர் புரோஹித், 'பளார்'

சென்னை : ''அரசியல்வாதிகளில், பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

அரசியல்,ஊழல்வாதிகள்,அதிகம்,கவர்னர்,புரோஹித்,பளார்


சென்னை பல்கலையின் இந்திய வரலாற்று துறை சார்பில், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின், 75ம் ஆண்டு நிறைவையொட்டி, கருத்தரங்கம் நடந்தது. 'வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு' என்ற தலைப்பில், கருத்துகள் பரிமாறப்பட்டன. இந்திய வரலாற்று துறை பேராசிரியர், எஸ்.எஸ்.சுந்தரம், கருத்தரங்கின் இயக்குனராக செயல்பட்டார்.


தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பெற்ற, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் கருத்தரங்கில்


பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்துடன் நடந்த இந்த போராட்டத்தில், இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.


தமிழகத்தில், மாநில கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி, லயோலா, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி மற்றும் ராணி மேரி கல்லுாரி ஆகியவற்றின் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பிரிட்டிஷ் அரசு ராணுவ உதவியுடன் போராட்டத்தை ஒடுக்கியது. அதன் பின் கிடைத்த சுதந்திரம், நம் நாட்டின் அனைத்து துறைகளையும் மாற்றி உள்ளது.


இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி, அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும்; ஏழ்மை போக்கப்பட வேண்டும்; அனைவருக்கும் கல்வியறிவும், வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும். சாதாரண பொதுமக்கள் தான், நாட்டின் எஜமானர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது.


உழைப்பு இல்லாத செல்வம்; மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி; நற்குணம் இல்லாத அறிவு; ஒழுக்கம் இல்லாத வணிகம்; மனிதாபிமானம்

Advertisement


இல்லாத அறிவியல்; தியாகம் இல்லாத மதம்; கொள்கை இல்லாத அரசியல் போன்றவை, நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.


தற்போதைய நிலையில், அரசியலில் கொள்கைகளே இல்லை. பெரும்பாலான அரசியல்வாதிகள், செல்வம் பெருக்கும் ஊழல்வாதிகளாக உள்ளனர். எனவே, நல்ல கொள்கை பிடிப்பு உள்ள அரசியல்வாதிகள் உருவாக வேண்டும். தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளதால், நாட்டின் வளர்ச்சியில், தமிழகம் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர் பேசினார்.


கருத்தரங்கில், உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன், சென்னை பல்கலை துணைவேந்தர், துரைசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyaga Rajan - erode,இந்தியா
17-ஜன-201811:53:48 IST Report Abuse

Thiyaga Rajanஊழல் என்று உண்மையைத்தானே சொன்னார் அதுக்கேன்யா இந்த குதிகுதிக்கிறான்கள்

Rate this:
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
07-ஜன-201808:20:55 IST Report Abuse

madhavaramanஇதுவரை தமிழகத்தில் ஆளுநர் பதவி வகித்த எவரும் ஊழல் மலிந்த நேரத்திலும் கூட அத்தகைய கருத்தை கூறியதில்லை.அனால் தற்போதைய ஆளுநர் அவர்கள் "அரசியலில் ஊழல்வாதிகள் அதிகம்" என்கிற கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்-அவரது கருத்து கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர அவரது மறுபக்கத்தை நாம் ஆராய வேண்டியது இல்லை-அவர் செய்திட்ட தவறுக்கு அவரை தண்டிக்க அரசும் சட்டமும் இருக்கிறது என்பது எனது கருத்து.

Rate this:
bal - chennai,இந்தியா
06-ஜன-201822:54:45 IST Report Abuse

balஇவருக்கு அதை சொல்ல யோக்கியதை இல்லை. ஏன் என்றால் MLA / MP பதவிக்காக காங்கிரஸ் மற்றும் பிஜேபியில் மாறி மாறி இருந்தவர். இவருக்கு ஒரு காலேஜ் இருக்கிறது. முப்பாட்டன் சொத்தா அது. வாய்க்கு வந்த மாதிரி பேச கூடாது.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X