பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி:வண்ணமயமான பூக்களால் மகிழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி:வண்ணமயமான பூக்களால் மகிழ்ச்சி

Added : ஜன 07, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பந்தலுார்;கேரளா, வயநாடு அம்பலவயல் பகுதியில் ஐந்தாவது ஆண்டாக நடந்த மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.நீலகிரி மாவட்ட எல்லை யை ஒட்டி, கேரளா, வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள அம்பலவயலில், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது.
265 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விவசாய பண்ணையில், பாக்கு, தென்னை, நெல், காபி, குறுமிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மலை விளைப்பயிர்களும் விளைகின்றன.மேலும், காய்கறிகள், பூக்கள் மற்றும் நறுமண பயிர்கள், மூலிகை பயிர்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாக, ஊட்டியை போன்று, இங்கும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, 12 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான மலர்கண்காட்சி கடந்த, 1ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கிறது. இதில், 1,640 வகை ரோஜாக்கள், 1,200 வகை டேலியா மலர்கள், 15 வகை கிளாடியோஸ், கார்னேசன், மெரிகோல்டு, ஆஸ்டர், சன்பிளவர், பெட்டூனியா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
இங்குள்ள குளத்தின் நடுவில் நடுவில் வண்ணமயமான பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது, கண்கவர் உருவங்கள், மிதக்கும் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணையில் நாற்று விற்பனையும் செய்யப்படுகிறது. நுழைவு கட்டணமாக, 30 ரூபாய் வசூலிக்கின்றனர்.சென்னையை சேர்ந்த சுற்றுலாப்பயணி வெங்கடேஷ் கூறுகையில், ''வெயில் சுட்டெரிக்கும் சென்னையிலிருந்து, குளு, குளு பிரதேசமான நீலகிரியில் சுற்றுப்பயணம் செய்தோம். தற்போது, கேரளா மாநிலத்தில் மிதமான வெப்ப காலநிலையை அனுபவிப்பதுடன், கண்களுக்கு இதமளிக்கும் மலர்காட்சியும் கண்டுரசிப்பது ரம்மியமாக உள்ளது,'' என்றார்.தோட்டக்கலை துறை பண்ணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில், ''சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பெற வரும், 18ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும். மலர்காட்சியின் மூலம், தோட்டக்கலை பண்ணையின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X