மலேசியாவில் ரஜினி பேட்டி- எக்ஸ்குளுசிவ் | Dinamalar

மலேசியாவில் ரஜினி பேட்டி- எக்ஸ்குளுசிவ்

Updated : ஜன 08, 2018 | Added : ஜன 07, 2018 | கருத்துகள் (134)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ரஜினி, மலேசியா, பேட்டி

கோலாலம்பூர் புக்கிட் ஜலால் விளையாட்டு அரங்கில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நட்சத்திர கலை விழா துவங்கியது. பின் 6அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அணி கேப்டன்கள் விலை உயர்ந்த மோட்டார் பைக்கில் பின்னால் நின்று கொண்டு மைதானத்தை சுற்றி வந்தனர். இறுதிப்போட்டிக்கு சிவா அணியும் சூர்யா அணியும் தேர்வாகின. சிவாவின் திருச்சி டைகர் அணி கோப்பையை வென்றது.

ரஜினியிடம் விவேக் கேட்ட கேள்விகளுக்கு ரொம்ப இயல்பாக நேர்மையான பதிலை அளித்தார்.
முதலில் நடிகை லதா 3 கேள்விகளை ரஜினி முன் வைத்தார்.

1. கடந்த 1970 களில் இருந்து உங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன் நினைத்ததை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர் நீங்கள். இவ்வளவு பேர் புகழ்கிடைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும் எளிமையின் காரணம் என்ன?

எப்படினு எனக்கே தெரியலிங்க .

2. இந்த கேள்வியை தப்பாக எடுத்துக்க கூடாது. டீன் ஏஜில் காதலித்த அனுபவம் உண்டா?

எஸ். ஹை ஸ்கூல் படிக்கும் போது ஒரு லவ் வந்தது.முதல் காதல் எப்பவுமே மறக்க முடியாது. பர்ஸ்ட் லவ் நிறைய பேருக்கு இருக்கும். அதில் நிறைய பேர் வெற்றி அடைந்து இருக்காங்க நிறைய பேர் தோல்வி அடைந்து இருக்காங்க..அந்த காதலில் நானும் தோல்வி அடைந்து இருக்கேன்.

3. அவங்க பேர் நினைவு இருக்கா?

நினைவு இல்லாமல் இருக்குமா. மன்னிக்கவும் சாரி என்று சொல்லி முடித்தார்.


கஷ்டமான கேள்விகள் வேண்டாம்


அடுத்து விவேக் சில கேள்விகளை ரஜினி முன் வைத்தார் கஷ்டமான கேள்விகள் வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொண்டார் ரஜினி.

01. பைரவி டு இந்திரன் , சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி?

என்45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லி இருக்கிறேன்.

02. நீங்கள் இப்போது நடந்து வரும்போது ஆடியன்ஸ் வெறி பிடித்த மாதிரி கத்தினாங்க. கேபி சார் உங்களுக்கு நடிப்பை தூண்டினாரா இல்லை உங்களுக்குள் இருந்த ஸ்டைல் கேபி சார் மூலமாக வெளி வந்ததா?


இப்ப நான் எப்படி இருக்கேனோ எப்போதும் அப்படித்தான் இருப்பேன். நான் பஸ் கண்டக்டராக இருக்கும் போது கூட வேற பஸ்களில் அரை மணி நேரத்தில் 40 டிக்கெட்டுகள் கொடுத்தால் நான் பத்து நிமிடங்களில் அந்த டிக்கெட்டுகளை கொடுத்து விடுவேன். கர்நாடக பஸ்ஸில் நான் வேலை பார்த்த போது ஆண்கள் பஸ் பின்னால் அமருவார்கள். பெண்கள் பஸ் முன் பகுதியில் அமருவார்கள். நான் எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு பஸ் முன் பகுதியில் தான் இருப்பேன் அப்போது தலைமுடி அதிகமாக இருக்கும். காதுக்கு பின் பறக்கும் முடிகளை கையால் கோதிவிட்டு speeda டிக்கெட் டிக்கெட் என்று கொடுப்பேன் இதை கேபி சார் பார்த்து இருக்கிறார். டேய் சினிமாவுக்கு நீ போனா இந்த ஸ்டைல் புதுசு.ஜனங்களுக்கு பிடிக்கும் இதை எப்பவும் மாற்றாதே என்று அட்வைஸ் பண்ணார். அதை நான் அப்படியே மெயின்டெயின் பண்றேன்.

03. உங்களுடைய குறைந்த பட்ச ஆசை என்ன? அதிக பட்ச ஆசை என்ன?

குறைந்த பட்சம் ஒரு ஸ்கூட்டர் வாங்கனும் 2 பெட்ரூம் உள்ள அபார்ட் மென்ட் வாங்கனும் ஒரு டீசன்ட் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ ஆசை.
அதிகபட்சம்னா என்னை வாழ வைத்த தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான்.

04. எப்ப நீ ங்க ரொம்ப ஜாலியாக இருந்திங்க எப்ப நீங்க ரொம்ப மனசு வருத்தபட்டிங்க?

படம் ஹிட் ஆனால் ஜாலியா சந்தோஷமாக இருந்திருக்கேன். படம் சரியாக போகவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கேன். நிறைய சந்தோஷபட்டு இருக்கேன்.. வாழ்க்கையில் நிறைய கண்ணீர் விட்டு இருக்கேன்.

05. பல தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்கள் உங்களுக்கு இருக்காங்க.. அந்த ரசிகர்களுக்காக அந்த பட்டர் பிட்டர் வசனங்களை பேசி காட்ட முடியுமா?
சாரி மறந்து விட்டேன்.

06.பொது வாழ்க்கைக்கு வரும் போது குடும்பம் சுகமா? சுமையா?

பொதுவாக சொல்லி விட முடியாது. தனி தனி நபர் வாழ்க்கையை பொறுத்தது.

07. கட்டம் சரியில்லை (ஜோதிடம்)என்று சும்மா இருக்கனுமா இல்லை முயற்சி பண்ணி பார்ப்போமே என்று உழைக்கனுமா?

ஜோதிடம் புராண காலத்தில் இருந்தே இருக்கிறது. அதையார் சொல்றாங்க என்பது முக்கியம். அதற்காக ஜோதிடத்தை கேட்டுக் கொண்டு சும்மா உட்கார முடியாது .என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும் .என்ன கிடைக்குமோ அது கிடைக்கதான் போகும். கிடைக்கிறது கிடைக்காமல் போகாது. . ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமா நேர்மையா செய்திட்டு இருந்தால் எல்லாமே நமக்கு கிடைக்கும்.

08. 1996 இல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது (அரசியல்) அதை தவற விட்டதாக நினைத்தது உண்டா?

ஒரு செகண்ட் கூட வருத்தப்பட்டது கிடையாது.

09 . முதல் முறையாக மலேசியா பயணம் செய்தது பற்றி?

1977 நினைத்தாலே இனிக்கும் படபிடிப்புக்கு நானும் கமலும் வந்திருக்கோம். எனக்கு அதுதான் முதல் முறை. அப்போது கமல் பெரிய நடிகர். நான் அப்போது தான் சினிமாவுக்கு வந்தேன். கமலை அழைத்து செல்ல தனி கார் வரும் ஆனால் ரஜினி எங்கே என்று கேட்டு என்னையும் அழைத்துசெல்வார். அரவணைத்து என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டார். சூட்டிங் முடிநத அன்று நானும் கமலும் இரவுகளில் மலேசியா வில் ஜாலியா என்ஜாய் பண்ணிருக்கோம். காலை நான்கு மணிக்கு வந்து தூங்குவோம். கேபி சார் வருவாங்க. என்னஇந்த பசங்க இப்படி பன்றாங்க என்று .அப்படியே பேசிட்டு போய்டுவாங்க. கமலும் நானும் இதை மறக்கவே மாட்டோம். அருமையான எக்ஸ்பீரியன்ஸ்.

10. வாழ்வின் நிறைவில் நீங்கள் என்னவாக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்?

ஒரு நடிகனாக வந்தேன் மகிழ்வித்தேன் நடிகனாக போய்ட்டேன் என்று என் வாழ்க்கை முடிந்து விட கூடாது என நினைக்கிறேன்.

11.இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தாய் தந்தை குடும்பம் ரொம்ப முக்கியம். அவங்க தான் தெய்வங்கள். முதலில் நீங்கள் அதை செய்தால் உங்கள் பின்னால் எல்லாமே வரும். முக்கிய மாக இளைஞர்கள் தாய் தந்தை யை வணங்குங்கள். அவர்களை சந்தோஷ படுத்துங்கள் அவர்களை சந்தோஷ படுத்தினால் போதும். ஆண்டவர் உங்களை சந்தோஷ படுத்துவார் என்று ரஜினி பேசி முடித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
APJ AK - AP,இந்தியா
13-ஜன-201800:29:16 IST Report Abuse
APJ AK 1) அதிக சத்ததுடன் தும்மினால் எக்ஸ்கூஸ்மீ (Excuse Me) சொல்லறோம் 2) முன் பின் அறிமுக இல்லாத நபர் சாவு பற்றி கேட்க நேரிட்டால், "ஐயோ சாரி" (Oh Sorry) சொல்லறோம் 3) என்னதான் நாம் வயதில் பெரியவராக இருந்தாலும், சார் மே இ கம் இன்? கேட்டு செல்கின்றோம் 4) இந்த அளவுக்கு அடுத்தவர் மனம் நோகாமல் பார்த்து பேசுவது, நடந்து கொள்வது தான் பண்பாடு 5) இந்துக்கள் பெரும்பான்மை உள்ள இந்து நாட்டில், இந்துக்களின் மிக உயர்ந்த கடவுள் ஆண்டாளை ஒரு தாசி என்று எப்படி சொல்ல முடிந்தது? 6) இந்துக்கள் மனம் மிக பெரிய காயத்தில்….. இனிமேல் மன்னிப்பு கேட்டால் என்ன? கேட்காவிட்டால் என்ன? (முத்துராமலிங்க தேவர்)
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
11-ஜன-201814:56:51 IST Report Abuse
Arumugam ரஜினிகாந்துக்கு தன் தாய் தந்தைக்கு தன் கடமைகளை செய்யவில்லை என்ற குற்ற உணர்வும், தன் மகள்கள், மனைவி தன்னிடம் உண்மையான அன்பை செலுத்தவில்லை என்ற ஆதங்கமும் அதிகமாக இருப்பதினால் தன் ரசிகர்களுக்கு தாய் தந்தையை கவனியுங்கள், குடும்பத்தை கவனியுங்கள் என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். பாவம், பணத்தை சம்பாதித்து என்ன பயன்?
Rate this:
Share this comment
Cancel
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
10-ஜன-201811:20:49 IST Report Abuse
Gopal Thiyagarajan தாங்கள் வாய் ஜால வித்தகர் . இந்த தமிழ் தேசத்திற்க்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை . அரசியலில் தற்போது ஈடுபட விரும்புவது உங்களை வெறுக்க செய்கிறது . சிறந்த சேவை என்பது , தன் நலன் கருதாது பிறருக்கு சேவை செய்வதே . இனிமேல் உங்கள் அரசியலும் எடுபடாது உங்கள் படங்களும் இனி வெற்றி பெறாது மொத்தத்தில் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டுள்ளீர்கள். என்னை போன்ற ரஜினி அபிமானிகள் நிச்சயம் இனி ரஜினியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
indian - m,மலேஷியா
09-ஜன-201816:36:17 IST Report Abuse
indian மலேசிய வாழ் தமிழர்களே திருந்துங்கள்...
Rate this:
Share this comment
Cancel
08-ஜன-201814:29:00 IST Report Abuse
nagarajansaptharishi An army without culture is a dull-witted army, and a dull-witted army cannot defeat the enemy..... Rajini should read the Constitution, and the fundamental rights. He often mentioned Charity to people. Charity means there is no equality. Charity could not have brought socialism.Our country should have been a socialist country as per our constitution.
Rate this:
Share this comment
Cancel
selvam k - Doha,கத்தார்
08-ஜன-201812:08:18 IST Report Abuse
selvam k இதனை வருடமா எதற்கும் வாய் திறக்காத நீங்கள் தற்போது ஈடுபட விரும்புவது உங்களை வெறுக்க செய்கிறது. படத்தில் நடித்த நீங்கள் நிஜத்தில் நடித்து ஏமார்ந்து போகாதீர்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
08-ஜன-201811:45:02 IST Report Abuse
ஜெயந்தன் யார்ரா இவன்..இங்கே கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்லி விட்டு மலேசியாவில் பேட்டி குடுக்கறான்..செய்யறது ஒரு இடம்..சொல்றது ஒரு இடம்..இது அப்படியே மோடியை போலவே இருக்கிறது..அவர்தான் நோட்டு செல்லாதுன்னு இங்க சொல்லிட்டு அதை பற்றி ஜப்பானில் போய் பேசினார்..
Rate this:
Share this comment
Cancel
Sivakumar - Chennai,இந்தியா
08-ஜன-201811:29:26 IST Report Abuse
Sivakumar ஏன் சிவாஜிராவ் கெய்க்வாட் கர்நாடகாவில் அரசியல் செய்யவில்லை ? இப்போதும் கையிலுள்ள படத்தின் வியாபாரம் தானே முக்கியம் . இதுவரை எங்கள் மண்ணுக்கு என்ன செய்துள்ளீர்கள் சிவாஜிராவ் கெய்க்வாட்அவர்களே ?
Rate this:
Share this comment
Nallasivan - Chennai,இந்தியா
08-ஜன-201814:45:28 IST Report Abuse
Nallasivanநண்பரே கர்நாடகாவில் பிறந்தவர் தமிழ்நாட்டில் அரசியல் ஏன் செய்கிறார் என்று கேட்கும் நீங்கள். பிற்காலத்தில் திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டாலின் ஏன் சென்னையில் அரசியல் செய்கிறார் என்று கேட்பீர்களா? அவரவர் பிறந்த ஊரில் இருந்து வெளியூருக்கே போகக்கூடாது என்றும் கூறுவீர்களா? இது மன்னராட்சி கிடையாது, அரசியல் என்பது மக்கள் சேவை, யாரும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கே எடுத்துரைத்த தமிழினத்தை சேர்ந்த நாம் இப்படி பிரித்துப் பார்க்கக்கூடாது. ரஜினி அரசியலுக்கு வரட்டும் , முடிந்தால் ஜெயிக்கட்டும், தவறு செய்தால் அந்த தவரைச் ஹசுட்டி காண்பித்து அவரை உதிப்பது தான் நியாயம். கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த கிண்டி தமிழ்க்குடி, இதை எந்த ஒரு தனி நபராலோ அரசியல்லளோ அழிக்க முடியாது. இந்தியாவில் பிறந்த யாரும் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்பது உரிமை. அதை பறிப்பது தவறு. பித்தால் ஒட்டுப் போடுவோம். மொழில். மதம், சாதியால் மக்களை பிரிப்பது தவறு....
Rate this:
Share this comment
Cancel
RajKumar -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-201810:24:37 IST Report Abuse
RajKumar everything is correct...
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
08-ஜன-201809:01:15 IST Report Abuse
Makkal Enn pakam சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்...... தமிழ்நாட்டின் நம்பிக்கை நச்சத்திரமாக இந்த சூப்பர் நட்சத்திரம் ஜொலிக்கும்.....வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை