Tamilnadu BJP chief accuses state government about transport labourers strike | தனியார் லாபத்தில் இயங்கும்போது அரசுக்கு மட்டும் நஷ்டம் ஏன் : தமிழிசை கேள்வி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் லாபத்தில் இயங்கும்போது அரசுக்கு மட்டும் நஷ்டம் ஏன் : தமிழிசை கேள்வி?

Added : ஜன 08, 2018 | கருத்துகள் (103)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழிசை சவுந்தர்ராஜன்,tamilisai soundararajan , பஸ் ஸ்டிரைக், Bus Strike,பாரதிய ஜனதா, Bharatiya Janata,அரசு போக்குவரத்து கழகம்,  State Transport Corporation,திராவிட கட்சிகள் ,Dravidian Parties, வேலைநிறுத்தம், பேச்சுவார்த்தை, ஸ்டாலின்,Stalin, போக்குவரத்து துறை, Transport Department,

சென்னை : நான்கு பஸ்களை இயக்கும் தனியார் முதலாளிகள் லாபம் காணும்போது, தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கும் அரசு, நஷ்டத்தில் இயங்குவது ஏனோ? என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊதிய உயர்வு கோரி பஸ் டிரைவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து சமாளித்து வருகிறது. அரசுக்கும், தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமுமின்றி இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசுக்கு நஷ்டம் ஏன்?

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, நான்கு பஸ்களை மட்டுமே இயக்கும் தனியார் நிறுவன முதலாளிகள் லாபம் பார்க்கும்போது, தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கும் அரசு, நஷ்டத்தில் இயங்குவது ஏனோ என்று கேள்வி எழுப்பியுள்ளார். பஸ் டிரைவர்களின் போராட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


திராவிட கட்சிகளே காரணம் :

போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் என தமிழிசை, டுவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். பஸ்களை அரசுடைமை ஆக்கி, நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனையா என்று அவர் வினா எழுப்பியுள்ளார்.


பங்குதாரர்களாக தொழிலாளர்கள்:

நஷ்டத்தில் இயங்கிவரும் போக்குவரத்து துறையை சீரமைக்க, தொழிலாளர்களை அதில் பங்குதாரர்களாக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று அரசிற்கு தமிழிசை யோசனை தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skandh - chennai,இந்தியா
09-ஜன-201811:34:40 IST Report Abuse
skandh ippadi kaattu kuchchal podum thamizhisaiyai maatrinaal dhaan bee je ppiyin melum sarivai mattuppaduththalaam.
Rate this:
Share this comment
Cancel
Nanpan - Pollachi,இந்தியா
09-ஜன-201811:23:36 IST Report Abuse
Nanpan ஏனம்மா தொழிலாளர்களின் வயிறெரிச்சலைக் கேட்டு வாங்குறீங்க? நீங்கள் மக்கள் பக்கமா இல்லை எடப்பாடி பக்கமா?
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
08-ஜன-201817:54:49 IST Report Abuse
Tamil Selvan தமிழகத்தில் மட்டுமே கட்சி நடத்தும் திராவிட கட்சிகள் மட்டும் எப்படி அதிக வாக்குகள் வாங்குகிறது... தேசிய அளவில் கட்சி நடத்தும் நாம் ஏன் NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்குகிறோம் என்று கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்?...
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
08-ஜன-201817:52:14 IST Report Abuse
Tamil Selvan தனியார் லாபத்தில் இயங்குகிறது என்பதனை கண்டு பிடித்த தாங்கள், அவர்கள் என்ன யுக்திகளை கையாளுகிறார்கள் என்பதனையும் கண்டு பிடித்து அதனை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தாங்களே அறிவுரை செய்து நட்டத்தில் இருந்து மீட்டேடுக்க உதவலாமே?...
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
08-ஜன-201817:25:36 IST Report Abuse
baski ஆமா..எல்லாத்துக்கும் மேல இருக்குறவன் பாத்துக்குவானு இருந்தா இப்படிதான்....
Rate this:
Share this comment
Cancel
Durai Jeyachandran - Madurai,இந்தியா
08-ஜன-201816:01:04 IST Report Abuse
Durai Jeyachandran இரண்டே காரணங்கள். ஒன்று, ஊழியர்களுக்கு சம்பளம் மிக அதிகம். எந்த வேலையும் இல்லாமல் சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பவர்கள் அதிகம். இரண்டு, ஊழல் எல்லா அரசு துறையையும் போல மிக அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
08-ஜன-201815:04:21 IST Report Abuse
pradeesh parthasarathy நாங்கள் முறையாக தான் சாலை வரி கட்டுகிறோம் ... அப்புறம் எதற்கு மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளது .... ? ஏர் இந்தியா நிறுவனந்த்தை ஏன் தனியாருக்கு டாடா விற்கு கொடுக்க முடிவு செய்துள்ளீர்கள் ... லாபத்தில் இயங்கும் சேலம் உருக்கலையை எதற்கு தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறீர்கள் ..... சாலைகளை எதற்கு தனியாரிடம் நீண்ட காலம் அடிப்படையில் குத்தகைக்கு விட முயற்சி செய்கிறீர்கள் .... இதையெல்லாம் மத்திய அரசு செய்யும்போது நாங்கள் எதற்கு வரி கட்ட வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-ஜன-201814:56:57 IST Report Abuse
Karuthukirukkan மற்ற தனியார் விமான நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும்பொழுது மத்திய அரசின் ஏர் இந்தியா ஏன் நட்டத்தில் இயங்குகிறது ?? ரயில்வே ஏன் நட்டத்தில் இருக்கு ?? மத்திய அரசின் 70 சதவீத நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன .. குஜராத் அரசின் கடன் 2 லட்சம் கோடி .. வை பிளட் ?? சேம் பிளட் ..
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
08-ஜன-201814:55:44 IST Report Abuse
Sivagiri ஐயோ பாவம் அப்பாவி சின்ன குழந்தை ஒண்ணுமே தெரியாது . . . கிடைத்தவர்கள் எடுத்துக் கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் பலர் வாட சிலர் வாழ . . . என்ற தத்துவத்தின் படி
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
08-ஜன-201814:51:53 IST Report Abuse
தமிழர்நீதி GST அதிகம் கொடுக்கும் மாநிலம் வறுமையில் தொழிலாளர்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை