அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்கலாமே ? ஐகோர்ட் யோசனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்கலாமே ? ஐகோர்ட் யோசனை

Updated : ஜன 09, 2018 | Added : ஜன 08, 2018 | கருத்துகள் (131)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அரசு பஸ் ஊழியர்கள்,Government bus employees, பஸ் ஸ்டிரைக்,Bus Strike, பொது மக்கள், General People, சென்னை உயர்நீதிமன்றம்,Chennai High Court, நீதிபதி இந்திராணி முகர்ஜி, Judge Indirani Mukherjee,சி.ஐ.டி.யு.,CITU, விபத்து, Accident, டிரைவர் ,Driver, கண்டக்டர் , Conductor, அரசு போக்குவரத்து கழகம், State Transport Corporation, ஊதிய உயர்வு , ஐகோர்ட், போக்குவரத்து துறை,Transport Department, சம்பள உயர்வு, வேலை நிறுத்தம், Strike,

சென்னை: அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும் போக்குவரத்தை நடத்த முடியாவிட்டால் கலைத்து விட்டு தனியார் மயமாக்க வேண்டியது தானே என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.


சி.ஐ.டி.யு., பதில் மனு

ஓய்வூதிய நிலுவை தொகை வழங்காதது, சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. இந்த சூழ்நிலையில், இப்பிரச்னை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ' வேலை நிறுத்தம் தொடர்பாக பிப்., மாதமே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. இப்பிரச்னை 8 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஓய்வூதிய நிலுவை தொகை, பணிக்கொடை வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசு சார்பில், நிலுவைதொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.


நீதிபதி கண்டிப்பு

அரசுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார். போராட்டத்தினால் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அரசு பஸ் ஊழியர்களுக்கு தெரியுமா; பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வூதிய நிலுவை தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் இந்த வழக்கை மாற்று அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஊழியர்கள் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் வழங்க முடியாவிட்டால் போக்குவரத்து கழகத்தை கலைத்துவிட்டு தனியார் மயக்கலாமே என்றும் நீதிபதி கூறினார். அதே நேரத்தில் ஸ்டிரைக் நடத்தக்கூடாது என்ற தடை நீடிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (131)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
14-ஜன-201820:05:33 IST Report Abuse
srisubram thaniyarmayam , endral yen thaniyar company galil nattam varathu ? yen vijay mallya 9000 kodi aatiyai pottan ? yen thaniyar niruvanangal vangiya kadanai thirumba thara iyalavillai ? yen mugalivakkam kattidam kavizhndathu ? yen ?share auto kararkal matrum auto kararkal indha strike samayam kollai adithargal , ashok pillar to guindy ku 60 rupai vangiya share auto karargal enna govt nadathura share auto va thaniyar udaiyatha?
Rate this:
Share this comment
Cancel
Visu - chennai,இந்தியா
10-ஜன-201813:30:51 IST Report Abuse
Visu தயவுசெய்து உடனே பண்ணுங்க
Rate this:
Share this comment
Cancel
SUNDAR - chennai,இந்தியா
10-ஜன-201808:48:56 IST Report Abuse
SUNDAR கண்டிப்பாக தனியார் மயமாக்கவேண்டும் ஏன் என்றால் அரசு ஊழியர்களுக்கு தங்களது வேலையில் ஒரு பொறுப்பு கிடையாது, பயம் கிடையாது, கடமை உணர்ச்சி கிடையாது மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் கிடையாது . பணம் பணம் தான் இவர்களது குறிக்கோள். தனது வேலை போய் விடும் என்ற பயம் இருந்தால் எந்த வேலையிலும் ஒருவன் கவனமாக இருப்பான், பொறுப்புடனும் இருப்பான். இந்த அரசு ஊழியர்களை, கடமை உணர்வுடன் வேலை செய்யாததால் அவர்கள் வேலையை தொடர தகுதி அற்றவர்கள் ஆகுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X