salem kolam | ஏழு லட்ச ரூபாய் பரிசு பெற்ற கோலங்கள்.| Dinamalar

ஏழு லட்ச ரூபாய் பரிசு பெற்ற கோலங்கள்.

Updated : ஜன 08, 2018 | Added : ஜன 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement

ஏழு லட்ச ரூபாய் பரிசு பெற்ற கோலங்கள்.


சேலம் நகரை இனிமேல் கோலம் நகர் என்று அழைக்கலாம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ குமரப்பா சில்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் அங்கு நடைபெற்ற மகா மெகா கோலப்போட்டியை பார்த்தவர்களின் எண்ணம் இப்படித்தான் இருந்தது.

ஊருக்கு வெளியே உள்ள நெய்காரப்பட்டி வித்யா பாரதி பள்ளியில் அதிகாலை குளிரில் எத்தனை பேர் கோலம் போட வந்துவிடப் போகிறார்கள் என்று நினைத்தால் அலை அலையாய் ஆயிரத்து இருநுாறு பேர் உதவியாளர்களுடன் வந்து கோலமிட்டனர்.
பெண்கள் மிகவும் முன்னேறிவிட்டனர் அவர்கள் இப்போதெல்லாம் கோலம் போடுவது போன்ற விஷயங்களில் இருந்து விடுபட்டுவிட்டனர் என்றெல்லாம் சொல்லப்படுவதை பொய்யாக்கும் விதத்தில் நிறைய இளம் வயதினர் கோலம் போட ஆர்வமாக வந்திருந்தனர் அவர்கள் போட்ட கோலத்தின் மூலமாக வெளிப்படுத்திய கருத்துக்கள் அற்புதமாக இருந்தது.

பாராம்பரியமான சிறுதானியங்களை உணவுப்பொருளாக உபயோகிக்க வலியுறுத்தியும்,பிளாஸ்டிக் பொருளை தவிர்க்ககேட்டும்,வேண்டாத குப்பைகளைக் கொண்டு கலைநயம் படைப்பது எப்படி என்றும்,பெண்களின் முக்கியத்துவம் குறித்தும் கோலத்தின் மூலமாக அருமையான பல கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
வித்தியாசமான சிந்தனைகளுடன் வியக்கவைக்கும் வண்ணங்களுடன் புதுமை கருத்துக்களுடன் போடப்பட்ட கோலங்களுக்கு சுமார் 7 லட்ச ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பெண்கள் போடும் கோலத்தை, என்ன பெரிய கோலம்? என்று இனி சாதாரணமாக கடந்துவிடாதீர்கள் அதில் முகநுாலிலும் ட்விட்டரிலும் காணக்கிடைக்காத கருத்துக்கள் குவிந்து கிடக்கலாம்.இங்கே உங்கள் பார்வைக்கும் சில கோலங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டு உள்ளது பார்த்துவிட்டு கருத்துக்களை பகிருங்களேன்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
10-ஜன-201805:11:17 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எவ்ளோ அழகு , அதுவும் அந்த மயில்களை என்ன ஒரு தத்ரூபமாக கொண்டுவந்துள்ளனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X