VVIP chopper scam: In a blow to CBI probe, Italy court acquits former CEOs of Finmeccanica, AgustaWestland | ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை| Dinamalar

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை

Added : ஜன 09, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஹெலிகாப்டர் ஊழல், Helicopter Scam,   இத்தாலி கோர்ட் , Italy Court, பின்மெகானிகா , Pin Mekanika, அகஸ்டா வெஸ்ட்லேண்டு, Agustawestland, சி.பி.ஐ .விசாரணை,CBI investigation, குஸெப்பி ஒர்சி,Guessby Orsi,  புருனோ ஸ்பாக்லினி , Bruno Spagnolini,  சிறை தண்டனை, imprisonment, சுப்ரீம் கோர்ட், Supreme Court,குற்றவாளிகள், விடுதலை,

புதுடில்லி: ரூ.3600 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக இரண்டு முக்கிய குற்றவாளிகளை இத்தாலி கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது.

2007-ம் ஆண்டு காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரதமர் உட்பட, 12 முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக, இத்தாலியை சேர்ந்த, ராணுவத்தளவாட உற்பத்தி நிறுவனமான, 'பின்மெகானிகா 'விடமிருந்து, 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க அதன் துணை நிறுவனமான, அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன், 2010ல், ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக இந்தியாவில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்தது. இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை சி.பி.ஐ .விசாரணை நடத்தி வருகிறது.

பின்மெகானிகா நிறுவனத்தின் முன்னள் தலைவர் குஸெப்பி ஒர்சி, அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ,புருனோ ஸ்பாக்லினி ஆகியோர் ரூ. 423 கோடி லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு கோர்ட் அவர்களுக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து மிலனில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி போதிய ஆதாரம் இல்லை என்பதால் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இருவர் விடுதலையால் இந்தியாவில் நடந்துவரும் இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
10-ஜன-201813:07:34 IST Report Abuse
Kaliyan Pillai மத்திய புலனாய்வுப் பிரிவா? இல்லை மத்திய அரசு ஊழியர்களை தாங்கிப் பிடிக்கும் பிரிவா? எல்லா வழக்குகளிலும் சோடை போவதேன்? அங்கும் லஞ்சம் தாண்டவமாடுகிறதா?
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-201817:32:49 IST Report Abuse
அப்பு ஐரொப்பாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த நாடு இத்தாலிதான்.... நம்ம காங்கிரஸ் தலைவரும் அங்கேருந்துதான் வந்தார்.... ராஜீவ் ஊழலை இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்தார்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-ஜன-201816:41:22 IST Report Abuse
Sridhar கோர்ட் சொன்னது ஊழலில் அந்த CEO வை தொடர்பு படுத்த சாட்சியங்கள் வலுவாக இல்லை என்பதுதான். மற்றபடி லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்றோ இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றோ சொல்லவில்லை. எப்படிப்பட்ட கில்லாடிகளாக இருக்கவேண்டும் நம்ம ஆட்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X