ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு

Updated : ஜன 10, 2018 | Added : ஜன 10, 2018 | கருத்துகள் (200)
Advertisement
ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு

சென்னை:‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டது.


வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:

* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?

* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று. ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார்.

பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி. இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவை தெரியாது..

திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல் கொண்டாள்.

நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு. இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.

*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.

*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா?

*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (200)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.RAMIAH - RAIPUR,இந்தியா
16-ஜன-201811:51:00 IST Report Abuse
D.RAMIAH Y FALLING IN LOVE THE RANGANATHANis man mad man KNPWS ABOUT THE GODDESS AMMAN IN SRI RANGAM TEMPLE CALLED THULUKKA NAACHIYAAR BEING WORSHIP THE DEVI DESCRIBED SUPPOSED TO BE DAUGHTER OF DELHI SULTAN ALAVUDIN GILJI OR SOME OTHER SULTAN THIS DEVI ATTAINED MUKTHI BY FALLING IN LOVE THIS RANGANATHAR STATUE BEING TKEN AWAY BY MAHALIKAPUR AND DEPT IN DELHI SULTAN PALACE
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
14-ஜன-201811:08:30 IST Report Abuse
Rangarajan Pg சினிமா என்ற சாக்கடையில் உழன்று பணம் சம்பாதிக்கும் இந்த அற்ப பிறவி கூறியதை நாம் அனைவரும் பெரிது படுத்தி பேசி பேசி இவனை பெரிய ஆளாக்கி விட கூடாது. கடவுளை நிந்தித்தவன் கடவுளால் தண்டிக்கப்படுவான். நாம் கடவுளை நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel
rp sundharrajan - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201808:31:32 IST Report Abuse
rp sundharrajan உண்மை
Rate this:
Share this comment
Cancel
APJ AK - AP,இந்தியா
13-ஜன-201800:09:26 IST Report Abuse
APJ AK 1) அதிக சத்ததுடன் தும்மினால் எக்ஸ்கூஸ்மீ (Excuse Me) சொல்லறோம் 2) முன் பின் அறிமுக இல்லாத நபர் சாவு பற்றி கேட்க நேரிட்டால், "ஐயோ சாரி" (Oh Sorry) சொல்லறோம் 3) என்னதான் நாம் வயதில் பெரியவராக இருந்தாலும், சார் மே இ கம் இன்? கேட்டு செல்கின்றோம் 4) இந்த அளவுக்கு அடுத்தவர் மனம் நோகாமல் பார்த்து பேசுவது, நடந்து கொள்வது தான் பண்பாடு 5) இந்துக்கள் பெரும்பான்மை உள்ள இந்து நாட்டில், இந்துக்களின் மிக உயர்ந்த கடவுள் ஆண்டாளை ஒரு தாசி என்று எப்படி சொல்ல முடிந்தது? 6) இந்துக்கள் மனம் மிக பெரிய காயத்தில்….. இனிமேல் மன்னிப்பு கேட்டால் என்ன? கேட்கவிட்டால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
12-ஜன-201820:55:00 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy சுடாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைரமுத்து , கனிமொழி, திருமா போன்றவர்களின் பேச்சுக்கள் 'தி மு க விம் வோட்டு வங்கியை பாதிக்கும். ஏன் என்றால் தற்போதைய தமிழகம் 1950 =1960 களில் இருந்த தமிழகம் அல்ல. ' திருப்பதி பொய் வந்தார் என்ற காரணத்திற்க்காக சிவாஜி கணேசன் கருணாநிதியால் பரிகாசிக்கப்பட்டவர். இன்று அதே கருணா தன மனைவி ,இனைவி , பிள்ளைகள் அவர்கள் மத நம்பிக்கையை பற்றி ஏதும் கூறியதில்லை. குறிப்பாக ராசாத்தி அம்மாள், சுடாலின் மனைவி, தயாளு அம்மையார் 'எவ்வளவு இறை நம்பிக்கை வைத்துள்ளார் என்பது எல்லோரும் அறிவர்.' அதனால் சுடாலின் அவர்கள் 'இந்து மதத்தை துச்சமாக பேசும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்களுக்கு மறைமுக எதிரி என்பதாகி உணர்வீர்.ராகுல் குஜராத்தில் 42 இந்து கோயில் ஏறி இறங்கினார் ஓட்டுக்காக [ இந்துக்களின் ] .மற்றும் இஸ்லாமியர்கள் கிருத்துவர்கள் தங்களுக்கு குண்டாக வோட்டு போடும் காலம் மாறிவிட்டது . அப்படி இருந்தால் காங்கிரஸ் தொர்த்திருக்காது. ஆர் கே நகரில் தி மு க டெபாசிட் இழந்ததை உணருங்கள் தாங்கள் நல்லவர் என்பதை நாம் அறிவோம், தயவு செய்து இந்துக்கள் வோட்டை இழக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
11-ஜன-201819:32:46 IST Report Abuse
Nakkal Nadhamuni இப்பொழுது எதற்காக இவர் இப்படி தேவையில்லாத பொய்யை மேற்கோள் காட்டினார் என்று புரியவில்லை... இவர்கள் போன்றவர்கள் செய்யும் மிக பெரிய தவறு, தமிழ் இலக்கியத்தில் இருந்து ஆன்மிகத்தை பிரிக்க நினைப்பது... தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது... திராவிட கழகங்கள் அதில் தோற்று விட்டன.. பக்தி இலக்கியங்களை தமிழில் இருந்து நீக்கிவிட்டு பார்த்தால் பெரிதாக ஒன்றும் கிடைக்காது.. இவர் போல் தமிழில் சிறந்தவர்கள் இதை ஏன் செய்யவேண்டும் என்று தெரியவில்லை... இத்தனை நாள் கஷ்டப்பட்டு வாங்கிய பெயர் இன்று ஒரே நாளில் விழுந்துவிட்டது... தன் மேல் தானே சேற்றை வாரி அடித்து கொண்டார்... தன் வினை தன்னை சுடும்... இதை சரிசெய்ய இவருக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும்... முக ராமானுஜரை பற்றி எழுதியது போல் இவரும் ஏதாவது செய்து பார்க்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Natrayan M - Dindigul,இந்தியா
11-ஜன-201818:58:16 IST Report Abuse
Natrayan M " நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா? " சரியான கருத்தை பதிவு செய்துள்ளார் ஜீயர் சுவாமிகள் இது மட்டும் போதாது. இனி வருங்காலங்களிலும் இந்து மதம் பற்றி கூறும் கருத்துக்களுக்கு பத்தி கூறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
11-ஜன-201817:31:57 IST Report Abuse
metturaan தகைவில்லா சொற்றாடல் செய்ய ,தமிழால் சோறு தின்னும், நன்றியில்லா நயவஞ்சக புரளிப்பாடும் கானல் முத்து ஒருவரே போதும் எம் சங்கத்தமிழையும் சந்திசிரிக்கச்செய்ய , நாவடக்கம் இல்லா நாராசகவி
Rate this:
Share this comment
Cancel
perumaln - andra pradesh,இந்தியா
11-ஜன-201817:13:28 IST Report Abuse
perumaln இனி நீ வைரமுத்து இல்லை துன்பமுத்து ஆரம்பம் ஆனது ...ஆண்டாளின் முப்பது பாசுரமும் பாடியவனெக்கெல் அந்த தாய் அவன் முன்தோன்றி அவனை காக்கும் அழகு அவனுக்குத்தான் தெரியும் ...
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
13-ஜன-201815:24:48 IST Report Abuse
anbuவைரமுத்து தமிழில் வறிய மொக்கு. கனிமொழி ஒரு களி மொழி ....
Rate this:
Share this comment
Cancel
IloveIndia - Chennai,இந்தியா
11-ஜன-201815:51:35 IST Report Abuse
IloveIndia ஒரு விஷயத்தை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல், தேவை இல்லாமல் எதற்கு கருத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. யோசித்து பேசினால் நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை