நாணய தயாரிப்பை நிறுத்துங்கள்! ஆலைகளுக்கு அரசு உத்தரவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாணய தயாரிப்பை நிறுத்துங்கள்! ஆலைகளுக்கு அரசு உத்தரவு

Added : ஜன 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நாணயம் ,Coin,  ரிசர்வ் வங்கி, Reserve Bank, மத்திய அரசு ,Central Government,  நொய்டா,Noida,  மும்பை, Mumbai, கோல்கட்டா,Kolkata,  ஐதராபாத், Hyderabad,

புதுடில்லி : அரசுக்கு சொந்தமான, நாணயங்கள் தயாரிக்கும் ஆலைகளில், தயாரிப்பு பணிகளை நிறுத்தும்படி, அவற்றின் பொது மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நொய்டா, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய நான்கு நகரங்களில், அரசுக்கு சொந்தமான, நாணயங்கள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் நாணயங்களை, பொது புழக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆலைகளில் நாணய தயாரிப்பை, கடந்த, 8ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளும்படி, அவற்றின் பொது மேலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள நாணயங்கள், பிரத்யேக அறைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அனைத்து அறைகளும் நிரம்பி வழியும் வகையில், நாணயங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த அறைகளில் உள்ள நாணயங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று, பொது புழக்கத்தில் விட்டு, அறைகளை காலியாக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாணயங்கள் தயாரிப்பு ஆலைகளில் உள்ள பிரத்யேக அறைகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-ஜன-201809:06:06 IST Report Abuse
Loganathan Kuttuva விலைவாசி ஏற்றதினால் பத்து ரூபாய்க்கு குறைவான நாணயங்களின் தேவை குறைந்து உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X