இயற்கை உலகம்: 'ஓசோன்' துளை மெல்ல மறைகிறதா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: 'ஓசோன்' துளை மெல்ல மறைகிறதா?

Added : ஜன 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இயற்கை உலகம்: 'ஓசோன்' துளை மெல்ல மறைகிறதா?

பூமியின் வளி மண்டலத்தில் இயற்கையாக படர்ந்திருந்த ஓசோன் வாயுப் படலத்தில் விழுந்திருந்த பெரும் துளையின் அளவு சற்று சிறிதாகி இருப்பதாக, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா அறிவித்துள்ளது. 2018ல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இது.
ஆலைகள், வாகனங்கள் மற்றும் பல கருவிகள் வெளியேற்றும் நச்சு வேதிப் பொருளான, 'குளோரோபுளூரோகார்பன்' தான் மெல்லிய ஓசோன் படலத்தில் துளை விழுந்ததற்கு காரணம் என, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, 1989ல், மான்ட்ரியேல் பிரகடனம் மூலம் குளோரோ புளூரோ கார்பனின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என, உலக நாடுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை குறைக்க தொடர் பிரசாரம் செய்தனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த பிரசாரத்தின் பலனாக, அந்த நச்சு வெளியேற்றம் குறைந்திருப்பதால் தான், தற்போது ஓசோன் படலம் மெல்ல மீட்கப்பட்டு வருவதாக, நாசா கருதுகிறது. இயற்கை அழித்த வாயுக் கவசமான ஓசோன் தான், சூரிய கதிர்களின் தாக்கத்தால் வரும் தோல் புற்று நோயை தடுக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை