இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!

Added : ஜன 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!

உலகிலேயே மிக வலுவான இழை ஒன்றை, அமெரிக்காவின், எம்.ஐ.டி., ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. சமீபகாலம் வரை வலுவான இழை என்றால் அது, 'கெவ்லார்' எனப்படும், பொருளில் உருவாக்கப்படும்
இழை. அதனால் தான், அதை தோட்டா துளைக்காத உடை தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
ஆனால், கெவ்லாரை விட வலுவான, 'டைனீமா' என்ற இழையையும் விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டனர். இப்போது, அதை விட வலுவான இழையை, எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதுதான், பாலி எத்திலின் நேனோ இழை!
குழ குழவென்று இருக்கும் பாலிமர் ஜெல் திரவத்தை, மிகையான வெப்பம் மற்றும் உயர் மின்புலத்தின் வழியே நுண் இழைகளாக உருவாக்கும்போது, அந்த நேனோ அளவுள்ள இழைகள் கடும் உறுதியையும், இலகுவான எடையையும் அடைவதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், மின்புலம் மற்றும் வெப்பத்தின் வழியே நேனோ தடிமனுள்ள இழையை உருவாக்கும் போது, எப்படி அதற்கு இத்தனை இலகுத் தன்மையும், வலுவும் வருகிறது என்பது, அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கே இன்னும் புரியவில்லை.
என்றாலும், அவை விரைவில், தோட்டா துளைக்காத உடை, தலைக் கவசம் போன்றவற்றில் பயன்படுத்தப்படலாம் என, அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201803:04:50 IST Report Abuse
தமிழ்வேல் தோட்டா துளைக்காத உடைகள் இதுவரையில் சிலந்தி கூடு இழையில் செய்வதாக படித்ததுண்டு. இதற்காகவே சிலந்திகள் வளர்க்கப்படுகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X