'வரவேற்பதில் தமிழர்களுக்கு நிகரானவர்கள் இல்லை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வரவேற்பதில் தமிழர்களுக்கு நிகரானவர்கள் இல்லை'

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழர்கள்,Thamilan, பிரான்ஸ் சுற்றுலா பயணி, France Tourist ,மேரி கார்மென்ட், Mary Garment, பொங்கல் விழா, Pongal Festival,தமிழர்கள் கலாசாரம், Tamils ​​culture,  தமிழர்கள் பாரம்பரியம் , Tamils ​​tradition, ஒயிலாட்டம், காவடியாட்டம், கும்மி,  மாணவர்கள்,Students,  கரகாட்டம்,முளைப்பாரி,

காரைக்குடி, : பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியர், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆடி, கும்மியடித்து பொங்கலை கொண்டாடினர்.

காரைக்குடி, ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் நடந்த பொங்கல் விழாவுக்கு, சிறப்பு விருந்தினர்களாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணியர் பங்கேற்றனர்.

மாணவர்கள் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆடி அவர்களை வரவேற்றனர். மாணவர்களுடன் சேர்ந்து பிரான்சை சேர்ந்தவர்களும் ஆடினர். ஆசிரியைகள் முளைப்பாரியை சுற்றி கும்மியடித்தனர். அதில் பங்கேற்ற, பிரான்ஸ் சுற்றுலாப்பயணியரும் கும்மியடித்து முளைப்பாரியை சுற்றி வந்தனர்.

பிரான்சை சேர்ந்த மேரி கார்மென்ட் கூறியதாவது:கடந்த, 7-ம் தேதி, நாங்கள் 16 பேர், இந்தியாவுக்கு சுற்றுலா வந்தோம். இங்குள்ள கலை, கலாசாரங்களை அறிந்து கொள்ளும் வகையில், சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறோம். தற்போது, கானாடுகாத்தானில்தங்கியுள்ளோம்.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில், எங்களை பங்கேற்க வைத்த, இப்பள்ளிக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி.அவர்களின் வரவேற்பு, எங்கள் விழிகளில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது. வரவேற்பு அளிப்பதில், தமிழர்களை, உலகத்தில் யாரும் மிஞ்ச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஜன-201813:26:00 IST Report Abuse
Pasupathi Subbian வந்தாரை மட்டுமே வாழவைக்கும் தமிழகம்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
12-ஜன-201809:01:01 IST Report Abuse
Siva தமிழன் கிராம வாழ்க்கை வாழ்கிறான். நகர பகுதியில் 10% தமிழன் கூட இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201808:53:12 IST Report Abuse
ushadevan உண்மை தான் தமழக மக்கள் ஜாதி மத பேதமின்றி அனைவரையும் பாராட்டுவார்கள் வரவேற்பார்கள்.மக்களுக்குள் "அவர்களாால் "பிரிவினை வராது. இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
12-ஜன-201806:48:05 IST Report Abuse
a natanasabapathy Aamaam appadi vanthavanukku yellaam varaverppu alithathaal inru thamizhnaattil thamizhan minority aaka ullavanukku kanimozhikkaaka malayaalathaan thaan thamizhanaivida athikamaaka ullaan
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
12-ஜன-201803:59:08 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வெளிநாட்டுக்கார பெண் அழகாக திலகம் வைத்து கொண்டு நிற்கிறார், நம்மூரு பட்டு புடவை கட்டி கொண்டு விதவை கோலம் பூண்டு நிற்கிறது என்று வைரமுத்துவின் ஆங்கிளில் பேசலாம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை