கத்தியைகாட்டி மிரட்டிய பயங்கரவாதி அனீபா கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியைகாட்டி மிரட்டிய பயங்கரவாதி அனீபா கைது

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கத்தியை காட்டி மிரட்டி, கையால் தாக்கிய பயங்கரவாதி முகம்மது அனீபா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் அருகேயுள்ள சென்னமநாயக்கன்பட்டி வேலுச்சாமி, திருமலை, சண்முகம் ஆகியோர் காரில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர்.
அப்போது எதிரே காரிலும், பைக்கிலும் வந்த பயங்கரவாதி தென்காசியை சேர்ந்த முகம்மது அனீபா தரப்பினர் வேலுச்சாமி காரில் மோதுவது போல சென்றனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வேலுச்சாமி தரப்பினர் தாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து பயங்கரவாதி முகம்மது அனீபா கத்தியை காட்டி மிரட்டி, கையால் தாக்கியதாக கைது செய்தனர். முகம்மது அனீபா தரப்பை சேர்ந்த மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.முகம்மது அனீபா கடந்த 2011ல் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு வந்த போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் வத்தலக்குண்டில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கடந்த 2013ல் பிடித்தனர். அப்போது அனீபா டி.எஸ்.பி.,யை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அனீபா, திண்டுக்கல்
செல்லாண்டி அம்மன் கோயில் தெருவில் தங்கி இருந்து தினமும் கோர்ட்டில் ஜாமீன் கை
யெழுத்திட்டு வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
12-ஜன-201819:44:29 IST Report Abuse
கதிரழகன், SSLC இவனை எல்லாம் கைது பண்ணி பெயில் கொடுத்து பிரியாணி போட்டு. என்கவுண்டர் பண்ணி குளோஸ் பண்ணறத விட்டுட்டு.... இந்த மாதிரி ஆளுங்களுக்கு துணை போற அரபிஅடிமைகளாலதான் காஷ்மீரில் அத்தினி ராணுவம் வேண்டி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை