நலத்திட்ட உதவிகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : ஜன 12, 2018
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. முகாமில் 125 முன் மனுக்கள் பெறபட்டு, 85 பயனாளிகளுக்கு 33 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டது. மேலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் மருந்தகத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு பள்ளியில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் போர்வெல் அமைக்கவும், தெருவிளக்குகளை பராமரிக்க 20 ஆயிரம் ரூபாய் என, 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் பரமக்குடி சப் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தாசில்தார் கோபால், முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ராதா கிருஷ்ணன், சாவித்திரி (கிராம ஊராட்சிகள்), மாவட்ட உதவி இயக்குனர் அமிர்தலிங்கம் (ஆயம்) உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement