நடைபாதையில் உயர் மின்அழுத்த கேபிள் : பாதசாரிகள் உயிருக்கு உலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் உயர் மின்அழுத்த கேபிள் : பாதசாரிகள் உயிருக்கு உலை

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எழும்பூர்: எழும்பூர், குழந்தைகள் நல மருத்துவமனை எதிரே, நடைபாதையில் செல்லும் உயர் அழுத்த மின்கேபிளால், பாதசாரிகள் உயிருக்கு ஆபத்து நிலவுகிறது. மாநகராட்சி அதிகாரிகள், விபரீதம் ஏற்படுவதற்கு முன், நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, எழும்பூர், தமிழ் சாலையில், அரசு குழந்தைகள் நல மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இம்மருத்துவமனைக்கு, தினமும், 5,000க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற வருகின்றனர்.
இந்த மருத்துவமனையின் எதிரில் செல்லும், நடைபாதையில், 15 அடி நீளத்திற்கு, உயர் அழுத்த மின்கேபிள் கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள, புதிய கட்டடத்திற்கான மின்வசதிக்காக, இவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆபத்தான முறையில் செல்லும் மின்கேபிளால், பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து நிலவுகிறது. பாதசாரிகள், அந்த கேபிளால், தடுக்கி விழுந்து, காயமடைவதும் தொடர்கதையாகிறது.
இது குறித்து எழும்பூரைச் சேர்ந்த ராஜன், 42 கூறியதாவது:
ஆபத்தான முறையில் செல்லும், உயரழுத்த மின்கேபிளை, சாலையின் உள்ளே பதிக்க, மாநகராட்சி அதிகாரிகளிடம், மனு கொடுத்துள்ளோம். அவர்கள், தற்காலிக மின் பரிசோதனைக்காக, இப்படி கேபிள் அமைத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து, சாலையின் உட்புறம் அமைக்கப்படும் என, தெரிவித்தனர். விபத்துகள் அதிகம் நடப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை