வெளிவட்ட சாலையில் சீமை கருவேல மரங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிவட்ட சாலையில் சீமை கருவேல மரங்கள்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லாவரம்: வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டி, அதிகரித்து வரும், சீமை கருவேல மரங்களை, அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
வண்டலுார்- - மீஞ்சூரை இணைக்கும் வகையில், வெளிவட்ட சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம், 1,900 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில், வண்டலுார்- -
நெமிலிச்சேரி; நெமிலிச்சேரி- - மீஞ்சூர் என, இரண்டு கட்டங்களாக பணி நடந்து வருகிறது.
முதல்கட்ட பணி முடிந்து, போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இச்சாலையின் நடுவில், 10 அடி ஆழத்திற்கு, பள்ளம் உள்ளது.சமீபத்தில் பெய்த மழையில், பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வண்டலுார், குன்றத்துார், பூந்தமல்லி பகுதிகளில், இந்த சாலையின், நடுவில் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சீமை கருவேல மரங்களும், அதிக அளவில் வளர்ந்து வருகின்றன.
இவ்வகை மரங்கள், நிலத்தடி நீரையும், ஈரப்பதத்தையும் அதிக அளவில் உறிஞ்சும். மண் உப்பு தன்மையாகிவிடும். அதனால், உள்ளாட்சி பகுதிகளில், சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதேபோல், வெளிவட்ட சாலையின் நடுவில், வளர்ந்து வரும் மரங்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X