சமூக ஆர்வலருக்கு '‛யுகசக்தி பாரதி' விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமூக ஆர்வலருக்கு '‛யுகசக்தி பாரதி' விருது

Added : ஜன 12, 2018
Advertisement

குரோம்பேட்டை: குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், சந்தானம், 80; கடந்த 40 ஆண்டுகளாக, பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், நியூ காலனி குடியிருப்போர் நலச்சங்கம், ரயில் பயணியர் நலச்சங்கம், மக்கள் விழிப்புணர்வு சங்கம், பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் இணைப்பு மையம் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இதுவரை, 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அளித்து, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
அரசின் கவனத்தை ஈர்க்க, வினோதமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தும் சந்தானத்திற்கு, அவரது சேவையை பாராட்டி, அவரது, 80வது பிறந்தநாளில், குரோம்பேட்டை, நேரு நகர், மாதர் சங்கம் சார்பில், குரோம்பேட்டையின் 'யுகசத்தி பாரதி' விருது, சந்தானத்திற்கு வழங்கப்பட்டது.

Advertisement