கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் வியாபாரம், 'டல்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் வியாபாரம், 'டல்'

Added : ஜன 12, 2018
Advertisement

கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில், பொங்கல் சிறப்பு சந்தை திறக்கப்பட்ட நிலையில், பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், வியாபாரம், 50 சதவீதம் சரிந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில், பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சிறப்பு சந்தையில், கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள் கொத்து, மண்பானை, வாழை இலை உள்ளிட்ட, பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
தற்போது, இரண்டு கரும்பு, 100 ரூபாய்க்கும், இரண்டு மஞ்சள் கொத்து, 20 ரூபாய்க்கும், போகி மேளம் ஒன்று, 30 ரூபாய்க்கும், இரண்டு தோரணம், 5 ரூபாய்க்கும், வாழை இலை ஒன்று, 5 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரண மாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துள்ளது.
இதனால், பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50 சதவீதம் வியாபாரம் கூட நடக்கவில்லை என்றும், வியாபாரிகள் புலம்புகின்றனர்.

Advertisement