அஞ்சல் துறை கணக்கு துவக்க சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் துறை கணக்கு துவக்க சிறப்பு முகாம்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் தனியார் கல்லுாரியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடந்தது.முகாமிற்கு உதவி கோட்ட கண்காணிப்பாளர் உமாராணி தலைமை வகித்தார்.சிவங்ககை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவநாதன் வரவேற்றார்.கல்லுாரி பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது.உதவி கோட்ட கண்காணிப்பாளர் உமாராணி கூறுகையில் இளைஞர்கள் அஞ்சலகங்களில் கணக்கு தொடங்க முன்வரவேண்டும், அஞ்சலகங்களில் சேமிப்பு என்பது இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் என்றார். பொட்டப்பாளையம் அஞ்சல் அதிகாரி ராஜலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை